முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மீண்டும் போர்: அடங்க மறுக்கும் ஈரான்- ட்ரம்பின் அறிவிப்பால் பதற்றம்

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே உருவான மோதல் சூழ்நிலை தற்போது மீண்டும் தீவிரமடைய தொடங்கியுள்ளது. 

இந்த நிலையில், அமெரிக்காவின் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், “ஈரான் ஆபத்தான அளவில் யுரேனியம் செறிவூட்டுகிறது என உளவுத்துறை உறுதி செய்தால், நிச்சயமாகவும் மீண்டும் குண்டுவீசுவேன்” என்று அறிவித்துள்ளார்.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் அணி சேர்ந்து, ஈரானின் முக்கிய அணு ஆய்வுகள் நடைபெறும் இடங்களை வான்வழியாகக் குண்டுவீசி தாக்கினர்.

ஒளிந்திருந்த கமேனி

இந்த தாக்குதலில் ஈஸ்பஹான் பகுதியில் உள்ள ஈரானின் அணு தொழில்நுட்ப மையங்களில் பல கட்டிடங்கள் முற்றிலும் சேதமடைந்தன. செயற்கைக்கோள் புகைப்படங்கள் இந்த சேதங்களை உறுதிப்படுத்தின.

மீண்டும் போர்: அடங்க மறுக்கும் ஈரான்- ட்ரம்பின் அறிவிப்பால் பதற்றம் | Trump Says Consider Bombing Iran Again

ஆனால், இதைப் பற்றி பேசும்போது ஈரானின் உயரிய தலைவர் அயத்துல்லா அலி கமேனி “இந்த தாக்குதல்களால் எதுவும் முக்கியமான பாதிப்பு ஏற்படவில்லை” என கூறினார்.

இதற்கு பதிலளித்த ட்ரம்ப், “அது பொய். அவரே உண்மை தெரிந்தவாறே பொய் கூறுகிறார்” என்றும், “அயத்துல்லா யாருக்கும் தெரியாத இடத்தில் ஒளிந்திருந்ததை நான் துல்லியமாகத் அறிந்திருந்தேன்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ட்ரம்பின் திடீர் முடிவு

மேலும், ட்ரம்ப் தனது ட்ரூத் சோசியல் கணக்கில், “ஈரானின் தலைவரை நேரடியாகத் தாக்க அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு நான் தடை விதித்தேன்” என்பதோடு, “அயத்துல்லா கொடுத்த துஷ்பிரயோகப் பேச்சுக்குப் பிறகு, ஈரானுக்காக தயாரிக்கப்பட்ட தடை நீக்க நடவடிக்கைகள் அனைத்தையும் உடனடியாக நிறுத்திவிட்டேன்” என தெரிவித்துள்ளார்.

மீண்டும் போர்: அடங்க மறுக்கும் ஈரான்- ட்ரம்பின் அறிவிப்பால் பதற்றம் | Trump Says Consider Bombing Iran Again

இந்நிலையில், ஈரான் இந்த தாக்குதலால் பாதிக்கப்படவில்லை என கூறினாலும், அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் அபாஸ் அராக்ச்சி, “அணு மையங்களில் மிகுந்த சேதம் ஏற்பட்டுள்ளது” எனத் தெரிவித்து, உண்மையை உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்தத் தாக்குதல்களின் காரணமாக, இருபுறத்திலும் பல உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன. ஈரானின் சுகாதார அமைச்சகம், 610 பேர் உயிரிழந்ததாக தெரிவித்துள்ளது. இஸ்ரேல் தரப்பில் 28 பேர் உயிரிழந்தனர்.

பேச்சுவார்த்தைக்கு ஈரான் மறுப்பு

இதன்படி, போர் தொடர்பாக இஸ்ரேல் “ஈரான் மிக விரைவில் அணுகுண்டு தயாரிக்கக்கூடிய நிலையிலுள்ளது. அதனைத் தடுக்கவே நாம் தாக்குதல் நடத்தியோம்” என அறிவித்திருந்து.

மீண்டும் போர்: அடங்க மறுக்கும் ஈரான்- ட்ரம்பின் அறிவிப்பால் பதற்றம் | Trump Says Consider Bombing Iran Again

எனினும், ஈரான் அதற்கு பதிலளிக்கையில், “நாங்கள் அணுசக்தியை மட்டும் சுமூகமான, பொதுப் பயன்பாடுகளுக்காகவே பயன்படுத்துகிறோம்” என தெரிவித்து எதிர்ப்பு தெரிவித்திருந்தது.

இதனைத்தொடர்ந்து, ட்ரம்ப் NATO உச்சிமாநாட்டில், “பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்க உள்ளது” என்று கூறியிருந்தாலும், ஈரான் இதை முற்றிலும் மறுத்துவிட்டது. “இப்போதைக்கு எந்தவொரு பேச்சுவார்த்தைக்கும் வாய்ப்பில்லை” என ஈரான் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், மூன்று நாடுகளும் தங்கள்தாங்களின் வெற்றியை அறிவித்து கொண்டுள்ளன. ஆனால் உண்மையில், இந்த திடீர் மோதல் அனைத்துக்கும் மேலாக, மீண்டும் ஒரு பெரிய போர் நிலைக்கு உலகத்தை அழைத்துச் செல்லும் அபாயத்தில் இருக்கிறது.  

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.