அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் விதித்த 30 சதவீத பரஸ்பர வரி நிவாரணத்தை உறுதி செய்வதற்காக இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக இடைவெளியை குறைக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
அதற்காக அமெரிக்காவிலிருந்து பொருட்களை கொள்வனவு செய்வதை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
உயர்மட்ட இராஜதந்திர தகவலுக்கு அமைய, முதலில் வருடாந்த எரிபொருள் தேவையின் ஒரு பகுதி, இலங்கையின் தனியார் நிறுவனத்திற்கான மூன்று போயிங் விமானங்கள் மற்றும் சோயா உற்பத்தி மூலப்பொருட்களை கொள்வனவு செய்வதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
வற் வரி
மேலும் இரு நாடுகளுக்கும் இடையே இறக்குமதி மற்றும் ஏற்றுமதியில் தற்போது நடைமுறையில் உள்ள வற் வரியை நீக்கி, அதிலிருந்து நிவாரணம் வழங்க யோசனை முன் வைக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதியின் தொலைநோக்கு பார்வைக்கமைய, வற் வரி ஒரு கட்டணமாகக் கருதப்படுவதால், அந்த நிவாரணத்தை வழங்க அமெரிக்காவிடமிருந்து கோரிக்கை வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.