முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அமெரிக்க ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்த தமிழர் தாயக மக்கள்..

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் மற்றும் யூ.எஸ். விமானத்திற்கு தமிழர் தாயக வலிந்து
காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினர் நன்றி தெரிவித்துள்ளனர்.

வவுனியாவில் 3218 நாட்களாக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி இடம்பெற்று
வரும் போராட்ட கொட்டகையில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே தமிழர் தாயக
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கத்தின் செயலாளர் கோ.ராஜ்குமார் இவ்வாறு
தெரிவித்தார்.

 சர்வதேச விமான நிலையம்

அவர் மேலும் தெரிவிக்கையில்,

வவுனியாவில் மழையிலும் வெயிலிலும் குற்றமற்ற தங்கள் காணாமல் ஆக்கப்பட்ட
குழந்தைகளுக்காக 3218 நாட்களாக போராடி வருகிறோம்.

அமெரிக்க ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்த தமிழர் தாயக மக்கள்.. | Trump Us Flight Thanks Families Of Missing

சமீபத்தில் அமெரிக்காவின் C-130 விமானம் யாழ்ப்பாணம் சர்வதேச விமான
நிலையத்தில் தரையிறங்கியது, இது எங்கள் போராட்டத்திற்கு புதிய நம்பிக்கையை
அளிக்கிறது.

இறுதி கட்டப் போரின் போது மற்றும் அதன் பின்னரும் காணாமல் ஆக்கப்பட்ட
ஆயிரக்கணக்கான தமிழ்ப்பிள்ளைகளின் நிலை குறித்த உண்மையைத் தேடி, பல
ஆண்டுகளாகத் தமிழ்தாய்மார்கள் சிங்கள அரசின் புறக்கணிப்பு, மிரட்டல் மற்றும்
அடக்குமுறைக்கு மத்தியில் தொடர்ந்து நின்று வருகின்றனர்.

ஆனால் அமெரிக்காவின் இந்த நடவடிக்கை, “நீதி வேண்டுமானால் உலக சக்திகள் தலையிட
முடியும்” என்பதை தெளிவாக காட்டுகிறது.

இலங்கையின் கடுமையான ராணுவ மற்றும் விமான கட்டுப்பாடுகளை மீறியும், அமெரிக்கா
நேரடியாக யாழ்ப்பாணத்தில் தரையிறங்கியது எங்களுக்கு ஒரு வலிமையான சின்னமாக
அமைந்தது.

எங்கள் அழைப்பு அமெரிக்காவை அடைந்து விட்டது.

 மனிதாபிமான நடவடிக்கை

இலங்கை அரசு எங்களை
மிரட்டினாலும், ஒடுக்கினாலும், அமெரிக்கா உலகத்துக்கு காட்டியது
நீதி வரவேண்டும் என விரும்பினால் எதையும் யாராலும் தடுக்க முடியாது.

யாழ்ப்பாணத்தில் இறங்கிய அந்த விமானம், தமிழர்களை எந்த சக்தியும் அச்சுறுத்த
முடியாது என்பதை அறிவித்தது. அவனின்றி எதுவும் அசையாது.’ இன்று எங்கள்
போராட்டத்தில் ஒரு அசைவு ஏற்பட்டுள்ளது.

தாய்மார்கள் மேலும் தெரிவித்ததாவது,

அமெரிக்க ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்த தமிழர் தாயக மக்கள்.. | Trump Us Flight Thanks Families Of Missing

அமெரிக்காவின் மனிதாபிமான நடவடிக்கை
தமிழ்த்தாய்மார்களுக்கு ஒரு நெறிப்படுத்தும் வலிமையாக அமைந்துள்ளது.

காணாமல்
ஆக்கப்பட்ட குழந்தைகளின் நிலை குறித்து உண்மையைத் தெரிந்து கொள்ள நாங்கள்
இன்னும் சர்வதேசத் தலையீட்டையும், நிபுணர் விசாரணைகளையும்,
பொறுப்புக்கூறலையும் கோருகின்றோம்.

காணாமல் ஆக்கப்பட்ட அனைத்து தமிழ்க்குழந்தைகளுக்கும் நீதி கிடைக்கும் வரை,
மற்றும் வட–கிழக்கு பிரச்சினைக்கு ஒரு அரசியல் தீர்வு அமையும் வரை, அமெரிக்கா
தனது ஈடுபாட்டை தொடர வேண்டுமென நாங்கள்
கேட்டுக்கொள்கிறோம்.தாய்மார்களின்போராட்டம் தொடர்கிறது. ஆனால் இன்று அது புதிய
நம்பிக்கையுடன் தொடர்கிறது. என்றனர்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.