முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இந்தியா உட்பட 09 நாடுகளுக்கு ட்ரம்ப் விடுத்த எச்சரிக்கை

தங்களுக்கு இடையேயான வர்த்தக பரிவர்த்தனைக்கான பொதுவான நாணயமாக உள்ள டொலரை மாற்றினால், இந்தியா உட்பட, ‘பிரிக்ஸ்’ அமைப்பில் உள்ள ஒன்பது நாடுகளுக்கு, 100 சதவீத வரி விதிக்கப்படும் என, அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவான டொனால்ட் டிரம்ப்(donald trump) கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

பிரேசில்(brazil), ரஷ்யா(russia), இந்தியா(india), சீனா(china), தென்னாபிரிக்கா(south africa) ஆகிய நாடுகள் அடங்கியதுதான் பிரிக்ஸ் அமைப்பு.

இந்த அமைப்பில், ஈரான், எகிப்து, எத்தியோப்பியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகியவையும் இடம்பெற்றுள்ளன.அமெரிக்கா அங்கம் வகிக்காத மிகப் பெரிய சர்வதேச அமைப்பாக இது விளங்குகிறது.

தனியான நாணயத்தை பயன்படுத்த பேச்சு

கடந்தாண்டு தென்னாபிரிக்காவில் நடந்த பிரிக்ஸ் மாநாட்டின்போது, அமைப்பில் இடம்பெற்றுள்ள நாடுகளுக்கு இடையேயான பரிவர்த்தனைக்கு, டொலருக்கு மாற்றாக வேறு நாணயத்தை பயன்படுத்துவது குறித்து பேசப்பட்டது.

அல்லது பிரிக்ஸ் அமைப்புக்கென தனியாக பொதுவான நாணயத்தை உருவாக்குவது தொடர்பாகவும் பேசப்பட்டது. குறிப்பாக, ரஷ்யா, சீனா ஆகியவை இதை வலியுறுத்தி வருகின்றன.

இந்தியா உட்பட 09 நாடுகளுக்கு ட்ரம்ப் விடுத்த எச்சரிக்கை | Trump Warns Brics Countries Including India

இந்நிலையில், அமெரிக்காவின் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப், அடுத்தாண்டு ஜன., 2-0ல் பதவியேற்க உள்ளார். சமூக வலை தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் அவர் கூறியுள்ளதாவது:

வேடிக்கை பார்க்கும் காலம் முடிந்து விட்டது.

டொலரை பொது நாணயமாக பயன்படுத்துவதில் இருந்து விலக, பிரிக்ஸ் நாடுகள் ஆலோசித்து வருகின்றன. இதை நாம் ஓரமாக நின்று வேடிக்கை பார்க்கும் காலம் முடிந்து விட்டது.

இந்தியா உட்பட 09 நாடுகளுக்கு ட்ரம்ப் விடுத்த எச்சரிக்கை | Trump Warns Brics Countries Including India

டொலரை மாற்ற மாட்டோம் அல்லது பொதுவான நாணயத்தை உருவாக்க மாட்டோம் என்ற உறுதிமொழியை, பிரிக்ஸ் அமைப்பில் உள்ள நாடுகள் அளிக்க வேண்டும்.

டொலருக்கு மாற்றாக வேறு எதையும் பயன்படுத்த மாட்டோம் என்று அவர்கள் உறுதிபட தெரிவிக்க வேண்டும். இல்லாதபட்சத்தில், 100 சதவீத வரியை அவர்கள் சந்திக்க நேரிடும்.

இதன்பின், அமெரிக்காவுடன் தொழில், வர்த்தகம் செய்ய முடியாது. அமெரிக்க பொருளாதாரத்தில் அந்த நாடுகள் இனி பங்கேற்க அனுமதிக்க மாட்டோம்.டொலர் பயன்பாட்டை தவிர்க்கும் எந்த ஒரு நாட்டுக்கும் இந்த, 100 சதவீத வரி முறை பொருந்தும் என தெரிவித்துள்ளார். 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.