அரசியல் கட்சிகளைச் சேர்ந்த சுமார் இருபது எம்பிக்கள் பல்வேறு பிரச்சினைகளால் கட்சி மாறுவதற்கான முடிவை எடுக்கத் தயங்குவதாக அரசியல் வட்டாரங்களில் இருந்து கூறப்படுகிறது.
இதேவேளை, கட்சி மாறுவதற்கு உத்தேசித்துள்ள கட்சிகள் வாக்குறுதியளித்த வரப்பிரசாத சலுகைகள் சில எம்.பி.க்களுக்கு கிடைக்காத காரணத்தினால் கட்சிமாற்றம் பிற்போடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
கட்சியில் சேர அழைக்கும் தலைவர்
ஒரு கட்சியின் குறிப்பிட்ட பலமான தலைவர் மீண்டும் கட்சியில் சேருமாறு செய்திகள் அனுப்பி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து கணிப்பால் கட்சி மாறல் ஒத்திவைப்பு
இதற்கிடையில், மற்றொரு குழு எம்.பி.க்கள் கருத்துக்கணிப்பு அறிக்கைகளை ஆராய்ந்த பின்னர் கட்சி மாற்றங்களை ஒத்திவைத்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
எனினும், அதிபர் தேர்தலுக்கு முன்னர் எம்.பி.க்களை மிரட்டி பணம் பறிக்கும் செயற்பாடுகள் அந்தந்த அரசியல் கட்சிகளில் தொடர்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.