முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பெட்ரோல் குண்டு வீசி ஐந்து வயது சிறுவனை கொன்றவர்கள் சிக்கினர்!!

களுத்துறை, கமகொட பகுதியில் உள்ள ஒரு வீட்டின் மீது பெட்ரோல் குண்டை வீசி, ஐந்து வயது சிறுவனைக் கொன்று, மற்றொரு பெண்ணை பலத்த காயப்படுத்திய குற்றச்சாட்டில் இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக களுத்துறை பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்ட நபர்கள் 23 மற்றும் 25 வயதுடைய இருவர் என்றும், அவர்கள் தோடங்கொட 33 அக்கர பகுதியையும், களுத்துறையின் கொங்கொட பகுதியையும் வசிப்பவர்கள் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர்கள் கடந்த 29 ஆம் திகதி களுத்துறை கமகொட பகுதியில் உள்ள ஒரு வீட்டின் மீது பெட்ரோல் குண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர், அதில் ஒரு பெண் பலத்த காயமடைந்துள்ளதுடன் அவரின் வீட்டிற்கு தொலைக்காட்சி பார்க்க வந்திருந்த செனல் சந்தீப என்ற ஐந்து வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.

மேலதிக விசாரணை

இந்த நிலையில், தாக்குதலுக்கு சந்தேக நபர்கள் பயன்படுத்திய மோட்டார் சைக்கிள், மற்றொரு பெட்ரோல் குண்டு, அதை தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட பொருட்கள் மற்றும் இரண்டு தொலைப்பேசிகளையும் காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.

பெட்ரோல் குண்டு வீசி ஐந்து வயது சிறுவனை கொன்றவர்கள் சிக்கினர்!! | Two Arrested Connection Petrol Bomb Incident

இதேவேளை, குறித்த குற்றச்செயலை மேற்கொள்ள சந்தேகநபர்கள் ஒப்பந்தமாக ரூ.5000 வாங்கியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. 

அதன்படி, சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்