தெற்கு மாகாணத்தின் அஹுங்கல்ல கடற்கரையில் உக்ரேனிய சுற்றுலாப் பயணி ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதுடன் 2 சிறுவர்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் நேற்று (26.01.2025) இடம்பெற்றுள்ளது.
வைத்தியசாலையில் அனுமதி
நேற்றைய தினம், 54 வயதான உக்ரேனிய நபரும் 13 மற்றும் 17 வயதுடைய இரண்டு உக்ரேனிய சிறுவர்களும் கடலில் குளிக்கச் சென்றபோது, பலத்த நீரோட்டம் அவர்களை இழுத்துச் சென்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், கடற்கரையில் பணியில் இருந்த பொலிஸ் உயிர்காக்கும் அதிகாரிகள் மூன்று சுற்றுலாப் பயணிகளையும் மீட்டுள்ளனர்.
இதனை தொடர்ந்து, உக்ரேனிய நபர் பலப்பிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.