முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

யாழ். பல்கலைக்கழகத்தின் கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் இரு முக்கியஸ்தர்கள் பதவி விலகல்

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் செயலாளர் மற்றும்
இளம் பொருளாளர் ஆகியோர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர்.

அவர்கள் வெளியிட்ட அறிக்கையில்,

மாணவர்கள் மீதான பழிவாங்குதல்கள் மற்றும் கற்றல் உரிமைகளிற்காக உண்ணாவிரதப் போராட்டம் கடந்த 24 மற்றும் 25ஆம் திகதிகளில் ஜனநாயக வழியில் நடைபெற்றது.

முழுமையான எதிர்ப்பு

எனினும், அந்த போராட்டத்தினை திசைதிருப்பும் வகையிலும்,
திரிபுபடுத்தும் வகையிலும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்டு வருகின்றார்கள் எனும் பொய்யான செய்தி ஊடக
சந்திப்புக்களில் பரப்பப்பட்டு வருகின்றது.

யாழ். பல்கலைக்கழகத்தின் கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் இரு முக்கியஸ்தர்கள் பதவி விலகல் | Two Members Of The Faculty Of Arts Union Resign

எமது பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், ஒன்றியப் பிரதிநிதிகள், பல்கலைக்கழகத்தின்
மாண்பு என்பவற்றிற்கு எதிராக முன்னெடுக்கப்படும் அனைத்துச் செயல்களையும்
முற்றாக மறுக்கின்றோம்.

கலைப்பீடத்தின் அனைத்து அணி மாணவர்களும் தமது முழுமையான எதிர்ப்பினையும்
கண்டனங்களையும் இச்செயல்களிற்கு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

விரைந்த நடவடிக்கை

எனவே, கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் செயலாளர் மற்றும் இளம்பொருளாளர்
பொறுப்புக்களிலிருந்து கூட்டாக விலகி நாங்களும் எமது கண்டனங்களைத்
தெரிவித்துக் கொள்கின்றோம்.

யாழ். பல்கலைக்கழகத்தின் கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் இரு முக்கியஸ்தர்கள் பதவி விலகல் | Two Members Of The Faculty Of Arts Union Resign

எவ்வித அடிப்படை ஆதரங்களுமற்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் சமூக
விரோதச் செயல்களில் ஈடுபட்டு வருவதாக பொய்யான செய்திகளைப் பரப்பும் நபர்களின்
மீது உடனடி மற்றும் விரைந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் உரிய தரப்பினரை
தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றோம் என குறிப்பிடப்பட்டுள்ளது. 

Gallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்