முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கட்டுநாயக்கவில் சிக்கிய இனியபாரதியின் இரு சகாக்கள்!

இனியபாரதியின் இரு சகாக்கள் கல்முனை மற்றும் கட்டுநாயாக்கா விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதில், டிலக்ஷன் என்பவர் கல்முனையில் வைத்து நேற்று (30) கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்தோடு, மற்றுமொரு நபரான வன்னியசிங்கம் பரமேஸ்வரன் என்பவர் கட்டுநாயக்கா
விமான நிலையத்ததில் கடந்த 12 அம் திகதி கைது செய்யப்பட்டுள்ளார்.

இருசகாக்கள் 

குறித்த விடயத்தை காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

கட்டுநாயக்கவில் சிக்கிய இனியபாரதியின் இரு சகாக்கள்! | Two More Associates Iniyabarathi Arrested By Cid

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், இனியபாரதி என அழைக்கப்படும் கிழக்கு மாகாண சபை
முன்னாள் உறுப்பினரும் மற்றும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின்
ஒருங்கிணைப்பாளருமான கே.புஷ்பகுமார் மற்றும் அவரது சகாவான சசீந்திரன் தவசீலன் ஆகியோர் மீது முறைப்பாடு ஒன்று முன்வைக்கப்பட்டிருந்தது.

படுகொலை 

திருக்கோவில் பிரதேசசபையின் முன்னாள் தவிசாளர்
உதயகுமார் படுகொலை தொடர்பாக, படுகொலை செய்யப்பட்ட பிரதேசசபை தவிசாளரின் மனைவி குறித்த முறைப்பாட்டை குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்வைத்திருந்தார்.

கட்டுநாயக்கவில் சிக்கிய இனியபாரதியின் இரு சகாக்கள்! | Two More Associates Iniyabarathi Arrested By Cid

இதனையடுத்து சந்தேகத்தின் அடிப்படையில் கடந்த ஜூலை ஆறாம் திகதி திருக்கோவிலில்
வைத்து இனியபாரதியையும் அவரது சகாவான மட்டு சந்திவெளியைச் சேர்ந்த சசிதரன்
தவசீலன் என்பவரையும் சந்திவெளியில் வைத்து குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் கைது செய்தனர்.

இந்தநிலையில், முன்னாள் பிரதேச சபை தவிசாளர் உதயகுமாரை கடந்த (2007.06.28) சம்பவதினம் வீட்டில்
இருந்து வெளியே வீதியில் சென்று கொண்டிருந்தபோது அவரை வாளால் வெட்டி
காயப்படுத்திய பின்னர் கைக்குண்டை வீதி படுகொலை செய்யப்பட்டதாக இனியபாரதியிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதிகாரிகள் 

இதனடிப்படையில், இனியபாரதியிடம் மேற்கொண்ட விசாரணையின் பின் அவரின் சகாவான கல்முனையைச் சேர்ந்த டிலக்ஷன் என்பவரை
சந்தேகத்தின் அடிப்படையில் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

கட்டுநாயக்கவில் சிக்கிய இனியபாரதியின் இரு சகாக்கள்! | Two More Associates Iniyabarathi Arrested By Cid

இதனுடன், இனியபாரதியின் இன்னொரு சகாவான வவுணதீவு பாவக்கொடிச் சேனையைச்
சேர்ந்தவரான வன்னியசிங்கம்
பரமேஸ்வரன் வெளிநாட்டுக்கு தப்பி செல்வதற்காக கட்டுநாயக்கா விமான நிலையம்
சென்ற நிலையில் அங்குவைத்து கடந்த 12 ஆம் திகதி குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதனடிப்படையில், சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட இருவரையும் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் விசாரணைக்காக கொழும்பிற்கு கொண்டு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.