விசேட அதிரடிப்படையினரால் கொலையொன்றுக்கு தயாராக இருந்த இரண்டு சந்தேக நபர்கள் T 56 துப்பாக்கிகளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கையானது, கம்பஹாவில் இன்று (19) பதிவாகியுள்ளது.
அத்துடன், அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைக்குப் பிறகு மேலும் ஐந்து சந்தேக நபர்களை அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
மீட்கப்பட்ட ஆயுதங்கள்
சந்தேக நபர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கம்பஹா ஒஸ்மான் என்ற நபர் உள்ளிட்ட குழுவினரை கொல்ல அவர்கள் திட்டமிட்டிருந்தது தெரியவந்துள்ளது.

இந்த நிலையில், சந்தேகநபர்களிடமிருந்து இரண்டு T-56 துப்பாக்கிகள், இரண்டு மகசின்கள், 105 தோட்டாக்கள் மற்றும் 15 தொலைபேசிகளும் மீட்கப்பட்டுள்ளன.
மேலும், சந்தேகநபர் கெஹெல்பத்தர பத்மே என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியின் ஆதரவாளர்கள் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

