முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மட்டக்களப்பு மாநகருக்குள் இரண்டு வாகன தரிப்பீடங்கள் திறப்பு

மட்டக்களப்பு மாநகரில் ஏற்படும் வாகன நெரிசல்களை கட்டுப்படுத்தும் வகையிலும்
மட்டக்களப்பு நகரினை அழகுபடுத்தும் வகையிலும் மாநகருக்குள் இரண்டு வாகன
தரிப்பீடங்கள் திறந்துவைக்கப்பட்டுள்ளன.

மாநகரங்களை அழகுபடுத்தும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் திட்டங்களில்
ஒன்றாக இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இதன் திறப்பு விழா நேற்று மாலை மட்டக்களப்பு மாநகரசபையின் ஆணையாளர்
என்.தனஞ்ஜெயன் தலைமையில் நடைபெற்றது.

தேசிய மக்கள் சக்தி

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட
பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு கலந்துகொண்டார்.
சிறப்பு அதிதியாக மட்டக்களப்பு பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர்
ஏ.எல்.எம்.ஜமீல்,மட்டக்களப்பு வர்த்தக சங்க தலைவர் தொழிலதிபர்
மு.செல்வராசா,மட்டக்களப்பு முஸ்லிம் வர்த்தக நலன்புரி சங்க தலைவர் ஜலீல்
ஹாஜியார்,மட்டக்களப்பு தலைமைய பொலிஸ் பொறுப்பதிகாரி
ஜி.எம்.பி.ஆர்.பண்டார,மட்டக்களப்பு குருமுதல்வர் அருட்தந்தை ஜோர்ஜ் ஜீவராஜ்
உட்பட பலர் கலந்துகொண்டனர்.

மட்டக்களப்பு மாநகருக்குள் இரண்டு வாகன தரிப்பீடங்கள் திறப்பு | Two Parking Lots Opened Within Batticaloa

இதன்போது மட்டக்களப்பு நகரில் இரண்டு வாகன தரிப்பு நிலையங்கள் மாநகரசபையினால்
அமைக்கப்பட்டு திறந்துவைக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாநகருக்குள் நூற்றுக்கணக்கான வர்த்தக நிலையங்கள் காணப்படுவதுடன்
அந்த வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்கள், தொழிலாளர்கள் வாகனங்களை
நிறுத்துவதற்கு பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கிவந்ததுடன் அவர்கள் தமது
வாகனங்களை பிரதான வீதிகளிலும் குறுக்கு வீதிகளிலும் நிறுத்துவதினால் பாரிய
போக்குவரத்து நெருக்கடிகளும் ஏற்பட்டுவந்ததுடன் நகருக்கும் தேவைகளை
நிறைவேற்றவரும் மக்கள் வாகனங்களை நிறுத்துவதில் பல்வேறு நெருக்கடிகளை
எதிர்கொண்டுவந்தனர்.

இந்த நிலையில் புதிய இரண்டு வாகன தரப்பிடங்கள் அமைப்பதனால் பாரிய வாகன
நெருக்கடியை தவிர்த்துக்கொள்வதுடன் வர்த்தகர்களுக்கும் தமது வியாபார
நடவடிக்கைகளை தடையின்றி முன்னெடுப்பதற்கான நிலை காணப்படும் என இங்கு
தெரிவிக்கப்பட்டது.

இந்த வாகன தரிப்பிடம் அமைப்பதற்கான காணியை மட்டக்களப்பு ஆயர் இல்லம்
வழங்கியுள்ளதுடன் அதற்கான வாடகையினை வழங்குவதற்கும் தரிப்பிடம் அமைப்பதற்கான
பணியை மேற்கொள்வதற்குமான நடவடிக்கையினை மட்டக்களப்பு மாநகரசபை
முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.