வீழ்ச்சியடைந்துள்ள பொதுஜனபெரமுனவின் செல்வாக்கை மீண்டும் மீட்டெடுக்கும் முயற்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச(namal rajapaksa) ஈடுபட்டுள்ள நிலையில் ராஜபக்ச குடும்பத்திற்கு எதிராகப் பயன்படுத்தப்படும் முக்கிய ஆயுதமான சொத்து தேடல் ஆயுதத்தால் ராஜபக்ச குடும்பத்தை குறிவைக்க அரசாங்கம் தயாராகி வருவதாக கொழும்பு ஊடகமொன்று தனது அரசியல் பத்தியில் தெரிவித்துள்ளது.
இது தெடார்பில் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
சக்தி வாய்ந்த உறுப்பினர்கள் மீது சுமத்தப்படவுள்ள குற்றச்சாட்டுகள்
ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு சக்திவாய்ந்த உறுப்பினர்கள் மீது நாளைக்குள்(24) பல கடுமையான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த இந்த இரண்டு சக்திவாய்ந்த இளைஞர்களின் வீடுகள், வங்கிக் கணக்குகள் மட்டுமல்லாமல், அவர்களது மனைவிகளின் அனைத்து சொத்துக்கள் குறித்தும் விசாரணைக் குழுக்கள் ஏற்கனவே விசாரணைகளை முடித்துவிட்டன என அறியப்படுகிறது.
ஊழல் குற்றச்சாட்டுகளின் பேரில் வழக்கு
இந்த விசாரணைகள் தற்போது மிகவும் கூர்மையான முடிவை நோக்கி நகர்கின்றன. அதன்படி, அடுத்த சில வாரங்களுக்குள், ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த இந்த இரண்டு சக்திவாய்ந்த உறுப்பினர்கள் மீது கடுமையான ஊழல் குற்றச்சாட்டுகளின் பேரில் வழக்குத் தொடரப்படும் சூழ்நிலை உருவாகும் என்று அறியப்படுகிறது.