நெதா்லாந்து (Netherlands) நாட்டில் இருந்து இரு அரிய வகை சிவப்பு பாண்டா கரடிகள் மேற்கு வங்கத்தின் டாா்ஜிலிங் வன உயிரியல் பூங்காவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
கிறிஸ்மஸ் பண்டிகையையொட்டி நெதா்லாந்தின் ரோட்டா்டாம் பகுதியிலிருந்து இந்த பாண்டாக்கள் இந்தியாவுக்கு (India) கொண்டு செல்லப்பட்டுள்ளன.
இந்த பாண்டாக்கள் விமானத்தில் 27 மணி நேரம் பயணித்து, கொல்கத்தா விமான நிலையத்தில் இருந்து குளிா்சாதன வசதியுள்ள சிறப்பு வாகனத்தில் டாா்ஜிலிங்குக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.
தேவையான குளிரான வானிலை
டாா்ஜிலிங் பூங்காவில் சிவப்பு பாண்டாக்கள் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சிவப்பு பாண்டாக்களுக்கு தேவையான குளிரான வானிலை எப்போதும் நிலவுவதால் டாா்ஜிலிங் பூங்கா தோ்வு செய்யப்பட்டது.
சிவப்பு பாண்டாக்கள் இரண்டரை வயதுடையவை. அவற்றுக்கு விஷால், கோஷி எனப் பெயரிடப்பட்டுள்ளது
ஒருமாதம் காண்காணிப்பில் வைக்கப்பட்டு, ஏற்கெனவே பூங்காவில் உள்ள இரு சிவப்பு பாண்டாக்களுடன் இவை சோ்க்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.