முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஏலத்தில் கோடிக்கணக்கில் விற்பனையாகியுள்ள மன்னர் சார்லஸ் உருவப்படத்தை கொண்ட பணத்தாள்கள்!

தனித்துவமான அம்சம் கொண்ட பிரித்தானிய(UK) மன்னர் சார்லஸ் உருவப்படத்தை கொண்ட பணத்தாள்கள் ஏலத்தில் கோடிக்கணக்கில் விற்பனையாகியுள்ளது.

அதாவது மன்னர் மூன்றாம் சார்லஸின்(Charles) படத்தை கொண்டுள்ள புதிய பணத்தாள்கள் ஏலத்தில் £9,14,127-க்கு (இலங்கை பணமதிப்பில் சுமார் ரூ. 35.18 கோடி) விற்பனை செய்யப்பட்டுள்ளது.

மேலும், இந்த விற்பனையின் மூலம் கிடைத்த வருமானம் முழுவதும் நன்கொடையாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணத்தாள்களின் மொத்த மதிப்பு 

இந்த பணத்தாள்களின் மொத்த மதிப்பு சுமார் £78,000 (இலங்கை ரூ.3 கோடி) ஆகும் எனினும் அவை ஏலத்தில் £9,14,127-க்கு (இலங்கை பணமதிப்பில் சுமார் ரூ. 35.18 கோடி) விற்பனை செய்யப்பட்டுள்ளது.

ஏலத்தில் கோடிக்கணக்கில் விற்பனையாகியுள்ள மன்னர் சார்லஸ் உருவப்படத்தை கொண்ட பணத்தாள்கள்! | Uk King Charles Banknotes Auctioned For Millions

இந்த பணத்தாள்களில், ஜூன் மாதத்தில் பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்லஸின் உருவப்படத்துடன் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய £5, £10, £20 மற்றும் £50 பணத்தாள்கள் அடங்கும்.

இந்த ஏலத்தில் ஒரு £50 நோட்டு £26,000-க்கு விற்பனை செய்யப்பட்டது, இது இங்கிலாந்து வங்கியின் ஏலத்தில் இதுவரை எட்டிய மிக உயர்ந்த விலை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், ஒரு £10 பணத்தாள், HB01 00002 என்ற தொடர்க்குறியீட்டுடன், £17,000-க்கு விற்கப்பட்டது.

கோடிக்கணக்கில் விற்பனை

இந்தப் பணம் 10 நன்கொடை நிறுவனங்களுக்கு வழங்கப்படும், இதில் Childhood Trust, Trussell Trust, Shout, Carers UK, Demelza, WWF-UK, Brain Tumour Charity, London’s Air Ambulance Charity, Child Bereavement UK, மற்றும் Samaritans ஆகியவை அடங்கும்.

இங்கிலாந்து வங்கியில் மொத்தம் 4.6 பில்லியன் பணத்தாள்கள் சுழற்சியில் உள்ளன, அவை சுமார் £82 பில்லியன் மதிப்புடையவை.

ஏலத்தில் கோடிக்கணக்கில் விற்பனையாகியுள்ள மன்னர் சார்லஸ் உருவப்படத்தை கொண்ட பணத்தாள்கள்! | Uk King Charles Banknotes Auctioned For Millions

17-ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்து வங்கி (Bank Of England) பணத்தாள்களை தயாரிக்கத் தொடங்கியது.

ஆனால், 1960-ஆம் ஆண்டில் தான், மறைந்த பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் படத்தை கொண்ட முதல் £1 காகித பணத்தாள்கள் வெளியிடப்பட்டன.

பிரித்தானியாவில் பணத்தின் பயன்பாடு குறைந்து வருகிறது, சமீபத்திய கணக்கெடுப்பின்படி, கிட்டத்தட்ட பாதி (48%) மக்கள் தங்கள் வாழ்நாளில் பணமில்லா சமூகத்தை எதிர்பார்க்கிறார்கள் என்பது தெரியவந்துள்ளது.

இப்போதும், ஜூலை மாதத்தில் தபால் நிலையங்கள் £3.77 பில்லியன் பண பரிவர்த்தனைகளைச் செய்துள்ளன, இது பண பரிவர்த்தனையின் அதிகரிப்பை காட்டுகின்றது என தகவல்கள் வெளியாகியுள்ளன.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.