பிரித்தானியாவின்(UK) இந்து- பசுபிக் பிராந்தியத்திற்கான அமைச்சர்
கெதரின் வெஸ்ட் யாழ்ப்பாணத்திற்கு(Jaffna) இன்றையதினம்(28) விஜயம் செய்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சிவஞானம் சிறீதரன்
ஆகியோர் அமைச்சரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
யாழ்ப்பாணத்திற்கு விஜயம்
யாழ்ப்பாணம் பொது சன நூலகத்திற்கு விஜயம் செய்த பிரித்தானிய அமைச்சர்,சிவில்
சமூக தலைவர்களையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இதன்போது இலங்கைக்கான(Sri lanka) பிரித்தானிய தூதுவர் அன்ட்ரு பற்றிக்கும் பங்கேற்றார்.
இலங்கை – ஐக்கிய இராச்சிய உறவுகளை வலுப்படுத்தவும்
வளர்ச்சியை ஊக்குவிக்கும் நோக்கிலும் ஐக்கிய இராச்சிய
அமைச்சர் விஜயம் அமைந்தது.