இலங்கையின்(Sri lanka) புதிய அரசாங்கம் மாற்றத்தை ஏற்படுத்த, பிரித்தானியா ஆதரவளிக்கும் என இலங்கைக்கான பிரித்தானிய உயர் ஸ்தானிகர் அண்ட்ரூ பெட்ரிக், தெரிவித்துள்ளார்.
இலங்கையில் புதிய அரசாங்கம், மிகப்பெரிய பெரும்பான்மையைப் பெற்றுள்ளது என்றும் சர்வதேச சமூகம் அந்த அரசாங்கத்துக்கு ஆதரவளிக்கத் தயாராக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய இராச்சியம்
சர்வோதய இயக்கம் ஏற்பாடு செய்த விருது வழங்கும் விழாவில் அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.