உமா ஓயா திட்டம் தொடர்பில் பூரண விசாரணை நடத்தப்படும் என தேசிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சமந்த வித்தியாரட்ன இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
தமது அரசாங்கத்தினால் உமாஓயா திட்டம் தொடர்பில் பூரண விசாரணை நடத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த திட்டத்தின் போது இடம்பெற்ற ஊழல் மோசடிகளைப் போன்றே மக்களுக்கு ஏற்பட்ட இழப்புக்கள் குறித்தும் விசாரணை நடத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அநேகமான அனர்த்தங்களை
இந்த திட்டத்தின் ஊடான அநேகமான அனர்த்தங்களை தடுக்க முடிந்த போதிலும் அனைத்து ஆபத்துக்களையும் தவிர்க்க முடியாமை குறித்து கவலையடைவதாக சமந்த வித்தியாரட்ன தெரிவித்துள்ளார்.
உமாஓயா அபிவிருத்தித் திட்டம் ஈரான் மற்றும் இலங்கை ஜனாதிபதிகளினால் நேற்றைய தினம் ஆரம்பித்து வைக்கப்பட்ட நிலையில் தேசிய மக்கள் சக்தி இந்த குற்றச்சாட்டுக்களை சுமத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது குறித்து ரணிலின் முடிவு
வவுனியா பல்கலை பெண்கள் விடுதியில் உள்ளாடையுடன் நுழைந்த நபரால் பரபரப்பு : மாணவி ஒருவரின் தாயாருக்கு நேர்ந்த விபரீதம்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |