ஈரானுடனான (Iran) நெருக்கமான உறவுகள் தொடர்ந்து கொண்டே இருக்கும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார்.
உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்ட திறப்பு விழாவில் இன்று (24.04.2024) உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“உமா ஓயா (Uma oya) பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்தின் வெற்றிக்காக ஈரான் வழங்கிய தொழினுட்ப ஆதரவுக்கு நன்றிகள்.
பலத்த பாதுகாப்புடன் மத்தளை விமான நிலையத்தில் தரையிறங்கிய ஈரான் ஜனாதிபதி
தெற்கு நாடுகள்
இந்நிலையில், ஈரானின் உதவியின்றி இலங்கையினால் உமா ஓயாவில் இருந்து கிரிந்தி ஓயாவிற்கு நீரை கொண்டு செல்லும் திட்டத்தினை நடைமுறைபடுத்தியிருக்க முடியாது.
மேலும், உலகளாவிய தெற்கு நாடுகள் தமது அடையாளத்தையும் சுதந்திரத்தையும் நிலைநாட்ட விரும்புகின்றன.
அதற்காக உலகளாவிய தெற்கு நாடுகள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.
இராணுவ சேவைக்காக இலங்கையர்கள் கடத்தப்பட்ட விவகாரம்: விஜயதாச ராஜபக்ச வெளிப்படுத்தியுள்ள விடயம்
டிக்டொக்கை தடை செய்வதற்கு ஒப்புதல் அளித்துள்ள அமெரிக்க செனட் சபை
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |