மகாவலி ஆற்றின் இருபுறமும் (குறிப்பாக கண்டியில்) அரசியல்வாதிகள் மற்றும் பல்வேறு நிலைகளைச் சேர்ந்த பல பிரமுகர்களால் முறையான அனுமதிகள் இல்லாமல் நடத்தப்படும் இருநூறுக்கும் (200) மேற்பட்ட ஹோட்டல்கள் மற்றும் சுற்றுலா உணவகங்கள் குறித்து சுற்றுச்சூழல் மற்றும் பேரிடர் துறை விசேட கவனம் செலுத்தியுள்ளது.
இந்த கட்டுமானங்களில் பெரும்பாலானவை தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பு அல்லது மத்திய சுற்றுச்சூழல் அதிகார சபையின் எந்த ஒப்புதலும் இல்லாமல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நம்பகமான வட்டாரங்கள் தெரிவித்தன.
சட்டவிரோத கட்டிடங்கள்

ஆற்றின் இருபுறமும் கட்டப்பட்ட ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களால் வெள்ள நீர் வடிந்து செல்வது கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பு மற்றும் மத்திய சுற்றுச்சூழல் அதிகார சபையின்
அனுமதி பெற்ற கண்டி பகுதியில் உள்ள எந்த வீடுகளோ அல்லது கட்டுமானங்களோ
நிலச்சரிவுகளால் பாதிக்கப்படவில்லை.
ஹந்தானகந்த, பஹிரவகந்த, அதிவத்த மற்றும் வேவராவ ஆகிய பகுதிகளில்,குறித்த அமைப்புகளின் தரத்தின்படி வீடுகள் கட்டப்பட்ட இடங்களில் நிலச்சரிவுகள் எதுவும் ஏற்படவில்லை என்று சுட்டிக்காட்டும் சுற்றுச்சூழல் அதிகாரிகள்,
தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பு மற்றும் மத்திய சுற்றுச்சூழல் அதிகாரசபையின் தரங்களுக்கு இணங்காத வகையில் கட்டப்பட்ட நடுத்தர மக்களின் வீடுகளில் பெரும்பாலானவை மண்சரிவால் சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

