முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

காலி கடற்கரையில் கரையொதுங்கிய அடையாளம் தெரியாத சடலம்

காலி அருகே கடற்கரையில் இன்று காலை அடையாளம் தெரியாத சடலமொன்று கரையொதுங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காலி, கஹவ கடற்கரையிலேயே குறித்த சடலம் இன்று(18) அதிகாலை வேளை கரையொதுங்கியுள்ளது.

பொலிஸார் விசாரணை

குறித்த சடலத்தின் முதுகுப்புறமாக வலது தோற்பட்டை அருகே ஆந்தையொன்றின் உருவம் பச்சை குத்தப்பட்டுள்ளது.

காலி கடற்கரையில் கரையொதுங்கிய அடையாளம் தெரியாத சடலம் | Unidentified Body Washed Up On Galle Beach

அத்துடன் இடது தோற்பட்டையிலும் இன்னொரு பச்சை குத்தப்பட்டுள்ளது.

குறித்த சடலம்  கடற்தொழிலாளர் ஒருவருடையதாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்றது.

இரண்டொரு நாட்களுக்கு முன்னதாக அவர் படகில் இருந்து தவறிக் கடலில் வீழ்ந்து உயிரிழந்திருக்கலாம் என்று நம்பப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் மீட்டியாகொடை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

ஆணொருவரின் சடலம்

இதேவேளை, மன்னார், நானாட்டான் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட அச்சங்குளம் கடற்கரையில் அடையாளம் தெரியாத ஆணொருவரின் சடலம் கரை ஒதுங்கியுள்ளது.

இந்த சடலம் நேற்று (17) இரவு ஏழு மணியின் பின்னர் அப்பகுதிக்கு கடற்றொழிலுக்கு பிடிக்கச் சென்ற கடற்றொழிலாளர்களுக்குத் தென்பட்டுள்ளது.

மேலதிக விசாரணை

அதனையடுத்து அப்பகுதி கடற்றொழிலாளர்கள் அச்சங்குளம் கிராம சேவையாளருக்கு அறிவித்ததை தொடர்ந்து கிராம சேவையாளர், முருங்கன் பொலிஸார், அச்சங்குளம் கடற்படையினர் சம்பவ இடத்துக்கு வருகை தந்து குறித்த உடலை பார்வையிட்டுள்ளனர்.

காலி கடற்கரையில் கரையொதுங்கிய அடையாளம் தெரியாத சடலம் | Unidentified Body Washed Up On Galle Beach

குறித்த ஆணின் சடலம் முற்றிலும் சிதைவடைந்துள்ள போதும் சிதைவடையாமல் காணப்படும் உடைகளை வைத்து குறித்த ஆண் 30 வயதுக்கு மேல் இருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

 மன்னார் நீதவான் நீதிபதி சம்பவ இடத்துக்கு வருகை தந்து மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளும் வரை குறித்த சடலம் கடற்கரையில் வைக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்