பொகவந்தலாவ (
Bogawantalawa) பகுதியில்
உள்ள கேசல்கமுவ ஒயாவில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் இனங்காணப்பட்டுள்ளதாக
காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவமானது காசல்ரீ நீர் தேக்கத்திற்கு நீர் ஏந்தி செல்லும் பொகவந்தலாவ பொகவானை பகுதியில்
உள்ள கேசல்கமுவ ஒயாவில் இன்றையதினம் (30.10.2024) இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், பொகவானை தோட்டபகுதியில் உப மின் நிலையத்தின் அருகாமையில் உள்ள ஒயாவில் சடலம் ஒன்று தலைகீழாக மிதந்துள்ளது.
தற்கொலையா? கொலையா
அதனை கால் நடைகளுக்கு புல் அறுக்க சென்ற நபர் ஒருவர் இனங்கண்டு காவல்துறையினருக்கு தகவல் வழங்கியுள்ளார்.
தகவலறிந்த பொகவந்தலாவ காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதோடு சடலம் இதுவரையிலும் அடையாளம் காணமுடியவில்லை என தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பாக தடவியல் காவல்துறையினர் வரவழைக்கப்பட்டு விசாரனைகளை மேற்கொள்ளவுள்ளதுடன், இது தற்கொலையா அல்லது கொலையா என பலகோணங்களில்
விசாரனைகளை ஆரம்பித்துள்ளனர்.
மேலதிக விசாரணை
சடலம் காணப்படும் பகுதியில் பாரிய அளவு நீர் இல்லை எனவும், இனங்காணப்பட்டவர் 35 மற்றும் 40 வயதுக்கிடைப்பட்டவர் என
ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவ காவல்துறையினர் மேற்கொண்டு
வருகின்றமை குறிப்பிடத்தக்கது.