வாழ்க்கைத்தொழில்சார் தொழில்நுட்பவியல் பல்கலைகழகத்தின் கீழுள்ள பல்கலைக்கழக கல்லூரிகளிற்கான புதிய மாணவர்களை அனுமதிப்பதற்காக நடைபெறவிருந்த நுழைவுப்பரீட்சை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மோசமான வானிலை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி, 30.11.2024 அன்று நடைபெறவிருந்த நுழைவுப்பரீட்சை 07.12.2024 இற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மேலதிக விபரங்கள்
இந்த நிலையில், பரீட்சை தொடர்பான மேலதிக விபரங்கள் பல்கலைக்கழகக்கல்லூரிகளின் இணையத்தளங்கள் மற்றும் உத்தியோகபூர்வ சமூகவலைத்தளங்கள் மூலமாக வருகின்ற நாட்களில் அறிவிக்கப்படும்.
இதேவேளை, 2024 ஆம் ஆண்டுக்கான இலங்கை சட்டக் கல்லூரி பொது நுழைவுப் பரீட்சை மற்றும் சனத்தொகை மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் சிரேஷ்ட புள்ளிவிபரவியலாளர்கள்(Bar Examination for Senior Statisticians / Statisticians)முதலாவது வினைத்திறன் காண் பரீட்சை – 2016 (2024) ஆகிய பரீட்சைகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.