மலையகத்திற்கான தொடருந்து சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
பதுளையிலிருந்து கண்டி நோக்கி பயணித்த தொடருந்து நேற்று(16) பிற்பகல் தெமோதர தொடருந்து நிலையத்திற்கு அருகில் தடம் புரண்டமை காரணமாக தொடருந்து சேவை தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது.
தொடருந்து சேவை
இதனால் மலையக தொடருந்து மார்க்கத்தில் பதுளை மற்றும் கொழும்பு கோட்டைக்கு இடையில் தொடருந்து சேவை தடைப்பட்டுள்ளதாக நாவலப்பிட்டி தொடருந்து கட்டுப்பாட்டு அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதேவேளை தொடருந்து தண்டவாளங்கள், தொடருந்து என்ஜின்கள், பெட்டிகள் மற்றும் புவியியல் காரணங்களினால் ஏற்பட்ட பராமரிப்பு பிழைகள் காரணமாகவே தொடருந்துகள் தடம் புரண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோளாறு
விசாரணைகளின்படி, பெரும்பாலான தொடருந்துகள் என்ஜின்கள் மற்றும் பெட்டிகளில் உள்ள சக்கரங்களில் ஏற்பட்ட கோளாறு காரணமாக தடம் புரண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக மலையக பாதையில் தண்டவாளங்களின் மோசமான பராமரிப்பு காரணமாக சில தொடருந்துகள் தடம் புரண்டுள்ளன.
இப்பகுதியின் புவியியல் சூழ்நிலை காரணமாக பெரும்பாலான தொடருந்து பாதைகள் பழுதுபார்க்க முடியாத நிலையில் உள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.