இலங்கையில் ஏற்பட்டுள்ள பேரிடர் நிலையில் இருந்து நாட்டை மீட்டெடுக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக அமெரிக்காவின் இரண்டு C-130J சூப்பர் ஹெர்குலஸ் விமானங்கள் கட்டுநாயக்கவில் தரையிறங்கியுள்ளன.
டிட்வா பேரிடரால் ஏற்பட்ட பாதிப்பில் இருந்து மக்களுக்கு தேவையான உதவிகளை இலங்கை இராணுவத்துடன் சேர்ந்து முன்னெடுக்க அமெரிக்க விமானப்படையின் 36வது தற்செயல் மீட்புக் குழுவுடன் குறித்த விமானங்கள் வருகைத்தந்துள்ளன.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் அவசரகாலப் பொருட்கள் – தங்குமிடம் பொருட்கள், தண்ணீர், சுகாதார உதவி, உணவு மற்றும் மருத்துவ உதவிகளை நகர்த்துவதற்கு இந்தக் குழு இலங்கை விமானப்படையுடன் இணைந்து செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
An expert team from the @usairforce has flown in with C130s to provide logistics and airlift support—they will help Sri Lanka continue to deliver critical humanitarian assistance to the island’s most devasted communities. Our longstanding cooperation and regular joint training… pic.twitter.com/c7DfyiWZp5
— U.S. Embassy in Sri Lanka (@USEmbSL) December 7, 2025
பேரிடர் மேலாண்மை
பேரிடர் மேலாண்மை மையத்தால் அடையாளம் காணப்பட்ட மிகவும் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அவசரகால உதவிகளை குறித்த குழு வழங்கும் என கூறப்பட்டுள்ளது.

இதன்படி “உயிர்களைக் காப்பாற்றுவதில் முன்னணியில் உள்ளவர்கள் கவனம் செலுத்துவதற்கு இந்த பணி, விமானப் போக்குவரத்து மற்றும் தளவாடத் சிறப்பை” கொண்டுவருவதாக அமெரிக்க தூதர் ஜூலி சங் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.




