முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மத்தள விமான நிலையத்தை குறி வைக்கும் அமெரிக்கா

2014 ஆம் ஆண்டில், சீனஅரசுக்குச் சொந்தமான நிறுவனமான சீன தேசிய வான்வழி தொழில்நுட்ப இறக்குமதி மற்றும் ஏற்றுமதி நிறுவனம், இலங்கையில் விமானப் பராமரிப்பு தளத்தை நிறுவுவதற்கான ஒரு திட்டத்தை சமர்ப்பித்தது.

 சிறிலங்கா விமானப்படைக்குச் சொந்தமான, சீனாவில் தயாரிக்கப்பட்ட விமானங்களுக்கு பராமரிப்பு சேவைகளை வழங்குவதே சீன திட்டத்தின் நோக்கமாகும்.

இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம் அந்நியச் செலாவணியைச் சேமிப்பதும், விமானங்கள் பழுதுபார்ப்புகளை வெளிநாடுகளுக்கு அனுப்புவதற்குப் பதிலாக உள்நாட்டில் மேற்கொள்ளச் செய்வதுமாகும்.

திருகோணமலையில் ஆர்வம் காட்டிய சீனா 

2014 ஆம் ஆண்டில், இந்தத் திட்டத்திற்கு இலங்கையில் பொருத்தமான இடத்தை அடையாளம் காணும் பணியில் அரசாங்கம் ஈடுபட்டிருந்தது.

திருகோணமலையில் சீனா ஆர்வம் காட்டியது. திருகோணமலையில் விமானப் பராமரிப்பு வசதியை சீனா கட்ட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியானபோது, ​​இந்தியா பதற்றமடைந்தது.

அந்த நேரத்தில், இடம் இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்றாலும், சீனா இந்தத் திட்டத்திற்கு உதவ விருப்பம் தெரிவித்ததாக இராணுவப் பேச்சாளர் தெரிவித்திருந்தார்.

மத்தள விமான நிலையத்தை குறி வைக்கும் அமெரிக்கா | Us Shows Interest In Mattala Airport

இந்தத் தகவல் வெளிச்சத்திற்கு வந்ததும், எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்தில் விளக்கம் கோரினார்.

அதற்கு, பொருத்தமான இடம் பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும், முன்மொழியப்பட்ட இடங்களில் திருகோணமலையும் இருப்பதாகவும் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ், பதிலளித்தார்.

ஜனாதிபதி அநுரவை சந்தித்த அமெரிக்க குழு

இருப்பினும், 2015 ஜனாதிபதிதேர்தலில் அரசாங்கம் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து இந்த திட்டம் கைவிடப்பட்டது.

அண்மையில் அமெரிக்காவை தளமாகக் கொண்ட போயிங் நிறுவனத்தின் ஒரு குழு இலங்கைக்கு பயணம் செய்து ஜனாதிபதி அநுரவை சந்தித்தது.

மத்தள விமான நிலையத்தை குறி வைக்கும் அமெரிக்கா | Us Shows Interest In Mattala Airport

மத்தள சர்வதேச விமான நிலையத்தில், ஒரு விமான பராமரிப்பு வசதி மற்றும் ஒரு விமான தொழில்நுட்ப பயிற்சி மையத்தை நிறுவுவதில் அவர்கள் ஆர்வம் காட்டினர்.

பிமலின் அறிவிப்பும் பதவிபறிப்பும்

முன்னதாக, மார்ச் மாதத்தில், மத்தளவில் ஒரு விமான பராமரிப்பு, மற்றும் பழுதுபார்க்கும் (MRO) வசதியை அமைப்பதற்காக அரசாங்கம் வெளிநாட்டு நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க அறிவித்திருந்தார்.

சீனாவை ஆதரிப்பவராக அறியப்பட்ட பிமல் ரத்நாயக்க அண்மையில் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

அவர் நீக்கப்பட்ட பின்னரே, போயிங் குழு தங்கள் திட்டத்துடன் இலங்கை வந்தது.

மத்தள விமான நிலையத்தை குறி வைக்கும் அமெரிக்கா | Us Shows Interest In Mattala Airport

ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில், மத்தள விமான நிலையத்தின் நிர்வாகத்தை ஒரு ரஷ்ய-இந்திய கூட்டு நிறுவனத்திடம் ஒப்படைக்க ஒப்புதல் வழங்கப்பட்டது.

இருப்பினும், அந்த ஒப்புதலை ரத்து செய்ய அமெரிக்கா கடுமையான அழுத்தத்தை செலுத்தியது.

அப்போது, ​​விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, மத்தளவை நிர்வகிக்க நியமிக்கப்பட்ட ரஷ்ய நிறுவனம் மீது தடைகள் விதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா தனக்குத் தெரிவித்திருந்தாலும், அது ஒரு இராஜதந்திர சம்பிரதாயம் மட்டுமே என்று கூறினார்.

2024 ஜனாதிபதி தேர்தலில் அநுரவின் வெற்றிக்குப் பிறகு, மத்தளவின் நிர்வாகத்தை ரஷ்ய-இந்திய நிறுவனத்திடம் ஒப்படைப்பதற்கான ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது.

அநுர அரசின் சாதகமான முடிவு

போயிங்கின் முன்மொழிவை ஜனாதிபதி அநுர எதிர்க்க வாய்ப்பில்லை.

அம்பாந்தோட்டை எண்ணெய் சுத்திகரிப்புத் திட்டத்தை சீனாவிற்கு வழங்குவதற்கு எதிரான சமநிலை நடவடிக்கையாக மத்தளவை அமெரிக்க போயிங் நிறுவனத்திடம் ஒப்படைக்க அவரது அரசாங்கம் ஒப்புக்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மத்தள விமான நிலையத்தை குறி வைக்கும் அமெரிக்கா | Us Shows Interest In Mattala Airport

அம்பாந்தோட்டை எண்ணெய் சுத்திகரிப்புத் திட்டத்தின் மூலம் சீனாவின் அதிகரித்து வரும் செல்வாக்கை எதிர்கொள்ளும் நோக்கத்தினால், மத்தளவில் அமெரிக்காவின் ஆர்வம் மேலும் தீவிரம் அடையலாம்.

ஆங்கில மூலம்- உபுல் ஜோசப் பெர்னாண்டோ

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.