முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

யாழில் உயர்தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட பயனுள்ள நூல்

தமிழ் அறிஞர் கே.பி.முத்தையா அவர்கள் எழுதிய தமிழ் அறிவு என்ற தமிழ் இலக்கண நூல் வடமராட்சி கிழக்கு கோட்டக் கல்வி பிரிவில் உள்ள ஐந்து பாடசாலைகளைச் சேர்ந்த கல்வி பொது தராதர உயர்தரப் பிரிவில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு சுவிஸ் வடமராட்சி கிழக்கு ஒன்றியத்தின் அனுசரணையுடன் வழங்கப்பட்டது.

வடமராட்சி கிழக்கு கோட்ட கல்வி பணிப்பாளர் செல்லத்துரை சிறீஇராமச்சந்திரன் அவர்களின் ஒருங்கிணைப்பில் மாணவர்களுக்கு இந்த நூல் வழங்கும் நிகழ்வு கட்டைக் காடு றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை, ஆழியவளை தமிழ் கலவன் பாடசாலை, உடுத்துறை மகாவித்தியாலயம், அம்பன் அமெரிக்க மிசன் தமிழ்க் கலவன் பாடசாலை, மணல் காடு றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை ஆகியவற்றில் நடைபெற்றது.

நிகழ்வில் கலந்து கொண்ட பலர்

இப்பாடசாலைகளில் கல்வி பொது தராதர உயர்தரத்தில் தமிழ் பாடத்தை கற்கும் 135 மாணவர்களுக்கு இந் நூல் வழங்கப்பட்டது.

யாழில் உயர்தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட பயனுள்ள நூல் | Useful Book To Students Alevel Exam Jaffna

இந்நிகழ்வில் சுவிஸ் வடமராட்சி கிழக்கு ஒன்றியத்தின் செயலாளர் இரா. துரைரத்தினம், ஓய்வு பெற்ற பாடசாலை அதிபரும் முன்னாள் பருத்தித்துறை பிரதேச சபை தவிசாளருமான அ.சா.அரியகுமார், மூத்த ஊடகவியலாளர் எஸ். தில்லை நாதன், பாடசாலை அதிபர்களான தவகோபால் யோகலிங்கம், கந்தசாமி சிவநேசன், நடராசா தேவராசா, குமாரவேல் கண்ணதாசன், கணேசமூர்த்தி உதயசீலன் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

கோட்டக்கல்வி பணிப்பாளர் செல்லத்துரை சிறீஇராமச்சந்திரன் உரையாற்றுகையில், “தமிழ் அறிவை வளர்க்கும் முகமாக வழங்கப்படும் இந்த நூலை மாணவர்கள் உரிய முறையில் பயன்படுத்த வேண்டும். இந் நூல் மாணவர்களுக்கு பெரிதும் பயன்படும்“ என்றார்.

ஆங்கிலத்திற்கு அடுத்த நிலையில் உள்ள தமிழ்மொழி

சுவிஸ் வடமராட்சி கிழக்கு ஒன்றியத்தின் செயலாளர் இரா.துரைரத்தினம் உரையாற்றுகையில், “நான்காயிரம் ஆண்டு பழமை வாய்ந்த தமிழ் மொழி உலகின் மூத்த மொழிகளில் ஒன்றாக திகழ்கிறது. இச் சமகாலத்தில் இருந்த பாளி சமஸ்கிருதம் கிரேக்கம் போன்ற மொழிகள் இன்று பேச்சு வழக்கில் இல்லை. தமிழ் மொழி இன்று கணனி பயன்பாட்டில் ஆங்கிலத்திற்கு அடுத்த நிலையில் உள்ளது என்பதையிட்டு நாம் பெருமைப்பட வேண்டும்.

யாழில் உயர்தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட பயனுள்ள நூல் | Useful Book To Students Alevel Exam Jaffna

தாய் மொழி இலக்கணத்தை கற்பதன் மூலம் பிற மொழிகளை இலகுவாக கற்க முடியும். யுத்தத்தாலும் சுனாமியாலும் பாதிக்கப்பட்ட வடமராட்சி கிழக்கு இன்று கல்வி துறையில் முன்னேற்றம் அடைந்து வருவதற்கு உறுதுணையாக இருக்கும் கல்வி அதிகாரிகள், அதிபர்கள், ஆசிரியர்கள் பாராட்டப்பட வேண்டியவர்கள்“ என்றார்.

வடமராட்சி கிழக்கை சேர்ந்த கல்விமான்

ஓய்வு பெற்ற பாடசாலை அதிபர் அ.சா.அரியகுமார் உரையாற்றுகையில், “தமிழ் அறிஞர் கே.பி.முத்தையா வடமராட்சி கிழக்கை சேர்ந்த கல்விமான். இப் பிரதேச கல்வி வளர்ச்சிக்கு உழைத்த ஒருவர். கவிஞர், எழுத்தாளர், தமிழ் அறிஞர், பட்டிமன்ற பேச்சாளர் என பல்துறை ஆளுமைகொண்ட முத்தையா இப் பிரதேசத்தை சேர்ந்த பலர் கல்வித்துறையில் முன்னேறுவதற்கு உறுதுணையாக இருந்தவர்

யாழில் உயர்தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட பயனுள்ள நூல் | Useful Book To Students Alevel Exam Jaffna

தமிழ் அறிவு என்ற நூல் இன்றைக்கு 50 ஆண்டுகளுக்கு முன்பு பாடநூலாக சேர்க்கப்பட்டிருந்தது. காலத்தால் அழியாத தமிழ் அறிவு என்ற நூல் உயர் தர மாணவர்கள் மட்டுமின்றி தமிழ் இலக்கணத்தை செம்மையாக கற்றுக்கொள்ள விரும்பும் அனைவருக்கும் உதவ கூடியது“ என்றார்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.