கம்பஹா – உஸ்வெட்டிகெய்யாவ கடற்கரையில் ஒருவர்
கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக பெண் ஒருவர் உட்பட ஏழு சந்தேக நபர்கள் கைது
செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 20ஆம் திகதியன்று இரவு உஸ்வெட்டிகெய்யாவவில் உள்ள
மோர்கன்வட்டா கடற்கரையில் நபரொருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
விசாரணைகள் முன்னெடுப்பு
சம்பவத்தில் 29 வயது இளைஞர் ஒருவரே உயிரிழந்தார்.
இந்த நிலையில் கொலைக்கான காரணங்கள் குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு
வருகின்றன.