இலங்கையின் விலங்கு உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் ஒரு புதிய கால்நடை மருத்துவரை கூட நியமிக்கவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அத்தோடு, இந்தத் துறையில் தற்போதுள்ள வெற்றிடங்களை மேலும் மோசமாக்குன்றது எனவும் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
வனவிலங்கு பாதுகாப்புத் துறையில், வனவிலங்கு சுகாதார பணிப்பாளர் தாரக
பிரசாத்தின் தகவல்படி, திணைக்களத்தில் 34 பேர் இருக்கவேண்டிய நிலையில் தற்போது
16 கால்நடை மருத்துவர்கள் மட்டுமே உள்ளனர்.
வெற்றிடங்கள்
கடந்த ஆண்டு, ஒரு பெண் மருத்துவர் மட்டுமே சேவையில் சேர்ந்தார்.
கால்நடை மருத்துவர்களை பொறுத்தவரை, அவர்கள் அதிக சம்பளம் மற்றும் சிறந்த
வசதிகளை வழங்கும் தனியார் விலங்கு மருத்துவமனைகளைத் தேர்வு செய்கிறார்கள்
என்று வனவிலங்கு சுகாதார பணிப்பாளர் தாரக பிரசாத் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் நாடு முழுவதும் முக்கியமான விலங்கு சிகிச்சை சேவைகள் தொடர்வதை
உறுதி செய்வதற்காக தகுதிவாய்ந்த கால்நடை மருத்துவர்கள் இந்தத் துறையில் இணைய
வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

