வட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த சிறுமி ஒருவர் தவறான நடத்தைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய இணைப்பாளர் த.கனகராஜ் தெரிவித்துள்ளார்.
இந்த சிறுமி 12 வயது வயதிலிருந்தே பாலியல் ரீதியான தவறான நடத்தைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என பிராந்திய இணைப்பாளர் த.கனகராஜ் தனது
செய்தி குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.
பாலியல் சீண்டல்
குறித்த செய்தி குறிப்பில்,
கடந்த 24 ஆம் திகதி அன்று இச்சிறுமி எமது அலுவலகம் வருகைதந்து தனக்கு ஏற்பட்ட பாலியல் ரீதியான தவறான நடத்தையை முறையிட்டார்.
எமது அலுவலகம் துரிதமாக செயற்பட்டு அன்றைய தினமே வடமாகாண நன்னடத்தை திணைக்கள
ஆணையாளர் ஊடாக யாழ்ப்பாண வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மருத்துவ
பரிசோதனைக்கு உட்படுத்திய நிலையிலயே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என
குறிப்பிடப்பட்டுள்ளது.