வவுனியா(vavuniya) – போகஸ்வே வெவ – மாமடு வீதி நீண்டகாலமாக புனரமைக்கபடாத நிலையில்
காணப்படுவதால் அந்த வீதியை பயன்படுத்த முடியாத நிலையில் மக்கள் இடர்பாடுகளை
எதிர்நோக்கியுள்ளதாக விசனம் வெளியிட்டுள்ளனர்.
வவுனியா தெற்கு சிங்கள பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட போகஸ்வே வெவ கிராமமானது
குடியேற்றக் கிராமமாகும்.
வவுனியாவில் இருந்து குறித்த கிராமத்திற்கு செல்கின்ற பிரதான வீதியில் மாமடு பகுதியில் இருந்து போகஸ்வே வெவ வரையிலான
சுமார் 15 கிலோ மீற்றர் நீளமான வீதியானது நீண்டகாலமாக புனரமைக்கப்படாது
குன்றும் குழியுமாக காணப்படுகின்றது.
இதனால் அவசர நோயாளர்களைக் கூட நோயாளர் காவு வண்டிகளில் உடனடியாக
வைத்தியசாலைக்கு கொணடு செல்ல முடியாத நிலை காணப்படுவதுடன், போக்குவரத்து
சேவையில் ஈடுபடும் பேரூந்துகளும் சீராக போக்குவரத்தை மேற்கொள்ள முடியாத நிலை
காணப்பகின்றது.
இதனால் இந்த கிராம மக்களும், அங்கு கடமை புரியும்
உத்தியோகத்தர்களும் நகருக்கு போக்குவரத்து செய்ய முடியாது
அவதிக்குள்ளாயுள்ளதுடன், குறித்த வீதியினை புனரமைக்க அதிகாரிகளும்,
அரசாங்கமும் கவனம செலுத்த வேண்டும் என்றும் அப் பகுதி மக்கள் கோரிக்கை
விடுத்துள்ளனர்.