முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மெல்ல,மெல்ல வழமைக்கு திரும்பும் வவுனியா

Courtesy: kapilan

 கடும் வெள்ள அனர்த்தத்திற்கு உள்ளாகி இருந்த வவுனியா நகரம் தற்போது மெல்ல
மெல்ல வழமை நிலைமைக்கு திரும்பி வருகின்றது.

கடந்த இரண்டு நாட்களாக தொடர்ச்சியான மழையின் காரணமாக பல்வேறு பிரதேசங்கள்
வெள்ளத்தில் மூழ்கிய நிலையில் மக்கள் பலர் இடம்பெயர்ந்து நலன்புரி
நிலையங்களில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.

இவர்களுக்கான சமைத்த உணவுகளை தன்னார்வ செயற்பாட்டாளர்கள் வழங்கி வந்ததோடு அரச
திணைக்களங்கள் சிலவும் வழங்கி இருந்தன.

இதேவேளை வெள்ள அனர்த்தம் ஏற்பட்டு பேரிடர் ஏற்பட்ட நிலையில் வவுனியா
மாவட்டத்தில் இரு உயிரிழப்புக்கள் இடம்பெற்றதோடு பல்வேறு அசெளகரியத்திற்கு
மக்கள் முகம் கொடுத்து இருந்தமை குறிப்பிடத்தக்கது.

வெள்ளத்தில் அகப்பட்டு மரணங்கள்

வவுனியா சாந்தசோலை பகுதியில் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்ட காரில்
இருந்து சடலங்களாக இருவர் மீட்கப்பட்டிருந்தனர்.

இவர்கள் இருவரும் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் என அடையாளம்
காணப்பட்டுள்ளனர்.

மெல்ல,மெல்ல வழமைக்கு திரும்பும் வவுனியா | Vavuniya Returns To Normal

பொது சுகாதார பரிசோதகரான 51 வயதான குமார செனவிரத்தின என்ற மட்டக்களப்பை
சேர்ந்த ஆணும் 38 வயதுடைய 306 ஏ காத்தான்குடி என்ற முகவரியை சேர்ந்த முகமது
முஸாபின் சப்ரினா எனவும் தெரியவந்துள்ளது.

 வெள்ளத்தில் அகப்பட்ட மக்கள்

இதேவேளை வவுனியாவில் கந்தசாமி நகர், பழைய மெனிபார்ம், கோதண்டர்நொச்சிக்குளம்,
பூம்புகார் ஆகிய இடங்களில் வெள்ளத்தில் அகப்பட்ட பல குடும்பங்களை
சேர்ந்தவர்கள் வெளியேற முடியாத நிலையில் காணப்பட்ட நிலையில் அவர்களை
கடற்படையின் உதவியுடன் மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மெல்ல,மெல்ல வழமைக்கு திரும்பும் வவுனியா | Vavuniya Returns To Normal

இந் நிலையில் பாவற்குளத்தின் நான்கு வான் கதவுகளும் முழுமையாக பத்து அடிவரை
திறக்கப்பட்டுள்ளதுடன் பேராறு அணைக்கட்டின் மூன்று வான்கதவுகளும் ஐந்து
மீட்டர் வரை திறக்கப்பட்டுள்ளது.

 இக் குளங்களுக்கு கீழுள்ள பல குளங்கள் உடைப்பெடுத்துள்ளதையும் அவதானிக்க
கூடியதாக இருக்கின்றது.

இதேவேளை பல குளங்கள் உடைப்பெடுக்கும் அபாயம் இருப்பதன் காரணமாக குளக்கட்டுகளை
வெட்டி நீரை வெளியேற்றும் செயற்பாட்டில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

போக்குவரத்து

இந்நிலையில்
வவுனியாவில் இருந்து மக்கள் தென்பகுதி நோக்கியோ யாழ்ப்பாணம் நோக்கியோ செல்ல
முடியாத வகையில் நொச்சிமோட்டை பாலம் மற்றும் சாந்தசோலை பகுதியில் பல அடி
உயரத்திற்கு வெள்ளம் ஏ9 வீதியை ஊடறுத்து சென்றதுடன் கல்குண்ணாமடு மற்றும்
ஈரப்பெரியகுளம் போன்ற பகுதிகளிலும் ஏ9 வீதியை ஊடறுத்து பல அடி உயரத்துக்கு நீர்
சென்ற காரணத்தால் குறித்த பகுதிகளின் ஊடாக மக்கள் போக்குவரத்து செய்வதற்கு
காவல்துறையினர் தடை விதித்திருந்தனர்.

மெல்ல,மெல்ல வழமைக்கு திரும்பும் வவுனியா | Vavuniya Returns To Normal

தற்போது குறித்த பகுதிகளில் வெள்ள நீர்
வடிந்தோடி இருப்பதன் காரணமாக பழையபடிபோக்குவரத்து
வருகின்றது. 

 இந்நிலையில் கையடக்க தொலைபேசி வலையமைப்புக்கள் பல இடங்களில்
செயலிழந்துள்ளமையினால் மக்களை தொடர்பு கொள்வதிலும் பெரும் சிரமங்களுக்கு
தொடர்ந்தும் முகம் கொடுத்து வருகின்றனர். 

GalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.