வவுனியா (Vavuniya) தெற்கு தமிழ் பிரதேச சபையின் தவிசாளர் தொடர்பில் தமிழரசுக்
கட்சிக்குள் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.
27 உறுப்பினர்களைக் கொண்ட வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையில் தேசிய மக்கள்
சக்தி – 7,260 வாக்குகள் – 6 உறுப்பினர்கள், இலங்கை தமிழ் அரசுக் கட்சி –
7,033 வாக்குகள் – 5 உறுப்பினர்கள் (போனஸ்-2), ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி –
3,949 வாக்குகள் – 3 உறுப்பினர்கள், ஐக்கிய மக்கள் சக்தி – 3,870 வாக்குகள் –
3 உறுப்பினர்கள் (போனஸ்-1), ஶ்ரீலங்கா தொழிலாளர் கட்சி – 3,436 வாக்குகள் – 2
உறுப்பினர்கள் (போனஸ்-1), ஜனநாயக தேசிய கூட்டணி – 2,075 வாக்குகள் – 2
உறுப்பினர்கள் (போனஸ்-1) பெற்றுக் கொண்டுள்ளன.
குழப்ப நிலை
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – 1,901 வாக்குகள் – 1
உறுப்பினர், தமிழ் மக்கள் கூட்டணி – 1,482 வாக்குகள் – 1 உறுப்பினர்
(போனஸ்-1), சுயாதீன குழு 2 – 1,285 வாக்குகள் – 1 உறுப்பினர் (போனஸ்-1), ஈழ
மக்கள் ஜனநாயக கட்சி – 1இ173 வாக்குகள் – 1 உறுப்பினர் (போனஸ்-1), சர்வஜன
அதிகாரம் – 1,123 வாக்குகள் – 1 உறுப்பினர் (போனஸ்-1), சுயாதீன குழு 3 – 768
வாக்குகள் – 1 உறுப்பினர் (போனஸ்-1) என்றவாறு கட்சிகள் மற்றும் சுயேட்சைக்
குழுக்கள் ஆசனங்களைக் கொண்டுள்ளன.

இதில் இலங்கை தமிழரசுக் கட்சி, ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி, ஐக்கிய மக்கள்
சக்தி, ஜனநாயக தேசியக் கூட்டணி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன்
இணைந்து 14 ஆசனங்களைப் பெற்று ஆட்சி அமைக்க நடவடிக்கை எடுத்துள்ளது.
இதில், தவிசாளராக பூவரசங்குளம், சாஸ்திரிகூழாங்குளம், சேமமடு ஆகிய
வட்டாரங்களில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மூவர் முனைப்பு காட்டி வருகின்றனர்.
இதன் காரணமாக யாரை தவிசாளராக நியமிப்பது என்ற குழப்ப நிலை கட்சிக்குள்
ஏற்பட்டுள்ளதாக உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

