வவுனியாப் (Vavuniya) பிரதேசசெயலகமும் பிரதேசகலாசார பேரவையும் இணைந்து வவுனியா இசை
ஆர்வலர்களுக்கு களம் அமைத்துக் கொடுக்கும் முகமாக “வவுனியாவின் குரல் 2024”
என்ற நிகழ்விற்கான விண்ணப்பங்களை கோரியுள்ளது.
வவுனியா பிரதேசசெயலக பிரிவிற்குட்பட்ட இசை ஆர்வலர்கள் மாத்திரம் குறித்த
போட்டியில் பங்குபற்ற முடியும்.
இரண்டு பிரிவுகளாக நடைபெறும் இப்போட்டியில், பிரிவு
ஒன்றில் 10 தொடக்கம் 18 வயதிற்குட்பட்டோரும் பிரிவு இரண்டில்18 வயதிற்கு மேற்பட்டோரும்
கலந்து கொள்ள முடியும்.
நிகழ்விற்கான விண்ணப்பம்
போட்டியில் பங்குபற்றுவோர் பிறப்பு சான்றிதழ் மற்றும் தேசிய அடையாள அட்டை மூலம்
வயதினை உறுதிப்படுத்த வேண்டும்.
நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது அத்தோடு விண்ணப்பப்படிவங்களை பிரதேசசெயலக கலாசார உத்தியோகத்தரிடம் அல்லது Divisional
Secretariat vavuniya அல்லது Vavuniya culture எனும் முகநுால் பக்கங்களிலும்
பெற்றுக்கொள்ளலாம்.
பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பப்படிவங்களை (10.09.2024) ஆம் திகதிக்கு முன்னர்
பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
இறுதித்திகதிக்கு பின்னர் கிடைக்கப்பெறும் விண்ணப்பப்படிவங்கள்
ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.
இரு பிரிவுகளிலும் முதல் மூன்று இடங்களைப் பெறுகின்ற வெற்றியாளர்களுக்கு 2024 ஆம்
ஆண்டு நடாத்தப்படுகின்ற பிரதேச கலாசார விழாவில் பரிசில் மற்றும் சான்றிதழ்
வழங்கப்படும்.
இதேவேளை பின்னனி இசைக்காக “கரோக்கி” பயன்படுத்தலாம் என
தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.