விலைகளைக் காட்சிப்படுத்தாமல், அதிக விலைக்கு ஒரு தொகை காய்கறிகளை விற்பனை செய்த வியாபாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குளியாப்பிட்டிய – கண்டி வீதியில், தெலியகொல்ல பகுதியிலுள்ள இரண்டு காய்கறிக் கடைகள் இன்று குருணாகல் மாவட்ட அதிகாரிகளால் சுற்றி வளைக்கப்பட்டுள்ளது.
சட்ட நடவடிக்கை
இந்நிலையில் அவர்களுக்கு எதிராக தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறர்.

இந்நிலையில் நாடளாவிய ரீதியில் இதுபோல அதிக விலைக்கு விற்பனை செய்யப்படும் கடைகள் சுற்றிவளைக்கப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

