யாழ்ப்பாணம் (Jaffna) வடமராட்சி பருத்தித்துறை மரக்கறி வியாபாரிகள் புதிய மரக்கறி
சந்தை தொடர்பில் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.
தற்போது தாம் வியாபாரம் மேற்கொள்ளும் மரக்கறி சந்தை, பேருந்து தரிப்பிடம் உட்பட மீன் சந்தை ஆகியவற்றோடு சேர்ந்துள்ளதாகவும், ஆனால் புதிதாக
அமைக்கப்பட்ட சந்தை சற்று தொலைவில் போதிய இட வசதிகள் இன்றி காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.
அதேவேளை மரக்கறி சந்தைக்கான பாதை ஒரு வழிப்பாதையாக உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளதுடன் தற்போது தாம் இருக்கும் மேல் தளத்திலிருந்து, அதன் கீழ்
தளத்தில் மரக்கறி சந்தையை மாற்றித் தருமாறும் மரக்கறி வியாபாரிகள்
கோரியுள்ளனர்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்….