இலங்கை மத்திய வங்கி, மத்திய வங்கிச் சட்டத்தின் கீழ், வாகன நிதியளிப்புக்கான கடன் மதிப்பு வீதங்களில் (Loan-to-Value – LTV) முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளது.
இந்த மாற்றங்கள் ஜூலை 17, 2025 முதல் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
LTV வீதங்கள்
இதன்படி, முன்னர் மின்சார வாகனங்களுக்கு வழங்கப்பட்ட 90% LTV வரம்பு நீக்கப்பட்டுள்ளதுடன், கார்கள், SUV-கள் மற்றும் வான்களுக்கான LTV வீதம் 50% இருந்து 60% ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

அத்தோடு, முச்சக்கர வண்டிகளுக்கான LTV 25% இருந்து 50% ஆக இரட்டிக்கப்பாக்கப்பட்டுள்ளதுடன் வாடகை மற்றும் வணிகப் பயன்பாட்டுக்கான வாகனங்களுக்கு LTV 70% ஆக வரையறுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, வணிக வாகனங்களுக்கான LTV 90% இருந்து 80% ஆக குறைக்கப்பட்டுள்ளது.
நோக்கம்
இந்த நிலையில், இலங்கையில் ஒன்றுக்கு மேற்பட்ட ஆண்டுகள் பதிவு செய்யப்பட்ட மற்றும் பயன்படுத்தப்பட்ட கார்கள் தற்போது 70% LTV வரம்பிற்குள் கொண்டுவரப்படுகின்றன.

குறித்த நடவடிக்கைகள், மத்திய வங்கியின் புள்ளிவிவர அடிப்படையிலான நிதிமுறை நிர்வாகத்தை வலுப்படுத்தவும், அமைப்பு ரீதியான அபாயங்களை கட்டுப்படுத்தவும், கடனளிக்கும் நடைமுறைகளில் ஒற்றுமையை ஏற்படுத்தவும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

