இலங்கையில் வாகன இறக்குமதி தடையை நீக்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அந்தவகையில் 2025 பெப்ரவரிக்குள் அனைத்து வாகன இறக்குமதி கட்டுப்பாடுகளையும் நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த தகவலை வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி (Ali Sabri) தனது எகஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
ரூபாயின் வலிமை
அந்நிய செலாவணி கையிருப்பில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் மற்றும் ரூபாயின் வலிமை ஆகியவற்றுடன், பெப்ரவரி 2025 க்குள் அனைத்து வாகன இறக்குமதி தடை/கட்டுப்பாடுகளையும் நீக்க அமைச்சரவை முடிவெடுத்துள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
பொருளாதாரத்தில் இயல்பு நிலையை மீட்டெடுக்கவும், மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யவும் மேற்கொள்ளும் முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என வெளியுறவு அமைச்சர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.