வாகன இறக்குமதி நடவடிக்கைகளை எவ்வாறு மேற்கொள்வது என்பது குறித்த வேலைத்திட்டத்தை தயாரிப்பதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் (Ranjith Siyambalapitiya) ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
நாட்டின் நிதி விவகாரங்களில் வழிகாட்டியாக மாறியுள்ள சர்வதேச நாணய நிதியத்துடன் பல நிதி விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டு இணக்கம் காணப்படும் என குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து மேலும் கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர்,
நாட்டின் வெளிநாட்டு கையிருப்பு
இதன்படி, வாகன இறக்குமதியானது நாட்டின் வெளிநாட்டு கையிருப்பை நேரடியாகப் பாதிக்கும் என்பதால், வாகன இறக்குமதிக்கான கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்காக அரசாங்கம் வீதி வரைபடத்தை சமர்ப்பித்துள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.
குறித்த வரைபடத்தின்படி, பொது போக்குவரத்து சேவைகளுக்காக பயன்படுத்தப்படும் வாகனங்களில் இருந்து குறிப்பிடத்தக்க முறையின் கீழ் ஒரு வரிசையில் இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்த எதிர்பார்க்கப்படுகிறது.
வாகன இறக்குமதிக்கான கட்டுப்பாடுகள்
குறிப்பிட்ட திட்டத்தை தயாரிப்பதற்காக, நிதி அமைச்சகத்தின் வர்த்தக மற்றும் கொள்கைத் துறை, மோட்டார் போக்குவரத்துத் துறை, மத்திய வங்கி, புதிய மற்றும் பயன்படுத்திய கார்களை இறக்குமதி செய்யும் இரு குழுக்களின் பிரதிநிதிகள், வாகன சங்கத்தின் பிரதிநிதிகள், கைத்தொழில் அமைச்சு, சுற்றாடல் அமைச்சு போன்ற அனைத்து குழுக்களையும் உள்ளடக்கி இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த வாகனங்களின் இறக்குமதிக்கான கட்டுப்பாடுகளை தளர்த்தும் போது, பொது மக்களின் போக்குவரத்துத் தேவைக்காகப் பயன்படுத்தப்படும் வாகனங்கள், பொருட்களை கொண்டு செல்லும் வாகனங்கள், பொதுமக்கள் பயன்படுத்தும் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் கார்கள் அதற்கு மாற்றாகப் பயன்படுத்தப்படும் வாகனங்கள் மீதான கட்டுப்பாடுகளை தளத்துவதற்கும் அரசாங்கத்தின் விசேட கவனம் செலுத்தப்படும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.