நாட்டில் வாகன இறக்குமதிக்காக இந்த ஆண்டில் இதுவரை சுமார் 1.8 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான கடன் கடிதங்களை (Letter of Credit – LC) திறக்க அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளதாக பிரதியமைச்சர் ஆர்.எம்.ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், அரசாங்கம் சுமார் 1.8 பில்லியன் டொலர் வரை கடன் கடிதங்களை திறக்க அனுமதியளித்திருந்தது.
வாகன இறக்குமதி
இருப்பினும் இதுவரை 1.2 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான வாகனங்கள் மட்டுமே இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.
நாட்டிற்கு இதுவரை சுமார் 60% வாகனங்கள் மட்டுமே வந்தடைந்துள்ளன, அதன் பெறுமதி சுமார் 1.2 பில்லியன் டொலராகும்.
அரசாங்கம் ஆரம்பத்தில் வாகன இறக்குமதியாளர்களுக்கு 1.2 பில்லியன் டொலர் வரை கடன் கடிதங்களைத் திறக்கவே அனுமதியளித்திருந்தது.

எல்லை படிப்படியாக அதிகரிப்பு
எனினும், கடன் கடிதங்களின் மொத்த மதிப்பு இந்த எல்லையை அடைந்தபோது, அரசாங்கம் படிப்படியாக இந்த எல்லையை 1.8 பில்லியன் டொலர் வரை அதிகரித்தது.
தற்போதைய நிலையில், கடன் கடிதங்களும் இந்தத் திருத்தப்பட்ட எல்லையை அடைந்துவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

