வாகனங்களை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்தால், அதற்கு சில ஒழுங்குமுறை முறைமைகள் தயாரிக்கப்பட வேண்டும் என இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, பயன்படுத்திய வாகனங்களை இறக்குமதி செய்யுமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்க தலைவர் இந்திக்க சம்பத் மெரன்சிகே தெரிவித்துள்ளார்.
வீதிகளில் பயணிக்கும் நபர்களை அச்சுறுத்தும் மோட்டார் சைக்கிள் கும்பல்
தனியார் வாகனங்கள் இறக்குமதி
பண விரயத்தை குறைக்கும் வகையில் பொருத்தமான வாகனங்களை நாட்டிற்கு இறக்குமதி செய்வதற்கு முறையான வேலைத்திட்டம் உருவாக்கப்பட வேண்டுமெனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, தனியார் வாகனங்கள் இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள தடைகளை நீக்குவது தொடர்பில் ஆலோசித்து வருவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க அண்மையில் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
வாகன இறக்குமதிக்கான அனுமதி! சபாநாயகர் உறுதிப்படுத்தியுள்ள விடயம்
தமிழரசுக் கட்சிக்கு இறுதிக் கிரியை செய்யும் பிரபல சட்டத்தரணி : அடுக்கப்படும் ஆதாரங்கள்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |