முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

வரியில்லா வாகன அனுமதிப்பத்திரம்:எம்.பிக்களிடையே வெடித்தது பிளவு

 வரியில்லா வாகன உரிமம் வழங்குவது தொடர்பாக எம்.பி.க்கள் மத்தியில் பிளவுகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.எனினும் உரிமம் வழங்குவது தொடர்பாக இதுவரை இறுதி முடிவு எடுக்க முடியவில்லை எனவும் தெரியவருகிறது.

வாகன உரிமம் பெற வேண்டும் என ஒரு தரப்பினர் கூறும்போது, ​​மற்றொரு பிரிவினர் வாகன உரிமம் பெறக்கூடாது என கூறுகின்றனர்.

இருசாராரிடையே வெடித்த முரண்பாடு

நாடு பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ள நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாகன அனுமதிப்பத்திரத்தை பெற்றுக் கொண்டால் அது தேர்தல் நேரம் பாரிய அச்சுறுத்தலாக அமையும் எனவும் அது மக்களின் வெறுப்புக்கு ஆளாக நேரிடும் எனவும் ஒரு தரப்பினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

வரியில்லா வாகன அனுமதிப்பத்திரம்:எம்.பிக்களிடையே வெடித்தது பிளவு | Vehicle License A Rift Erupted Among Mps

ஆனால் பல வருடங்களாக வாகன அனுமதிப்பத்திரம் பெற்றுக் கொள்ளப்படாத நிலையில் தற்போது அதனை பெற்றுக்கொள்வதே பொருத்தமானது என மற்றைய தரப்பினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அனுமதிப்பத்திரம் வழங்காவிடின் தேர்தலில்

இதன்படி, எதிர்வரும் தேர்தலுக்கு முன்னர் வரியில்லா வாகன அனுமதிப்பத்திரங்களை வழங்குமாறும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளதுடன், வாகன அனுமதிப்பத்திரம் பெறப்படாவிட்டால் எதிர்வரும் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை எனவும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு அதிபர் ரணிலிடம் தெரிவித்துள்ளனர்.

வரியில்லா வாகன அனுமதிப்பத்திரம்:எம்.பிக்களிடையே வெடித்தது பிளவு | Vehicle License A Rift Erupted Among Mps

வாகன அனுமதிப்பத்திரம் அவசியமானது என நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று தெரிவித்த அதேவேளை, தற்போதைக்கு வாகன அனுமதிப்பத்திரங்களை பெற்றுக்கொள்ள வேண்டாம் என மற்றொரு குழுவினர் கூறியதாகவும் ஐக்கிய மக்கள் சக்தியினர் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்