முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

வாகன இறக்குமதி தொடர்பில் ஜனாதிபதி விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

இறக்குமதி செய்யப்படும் வாகனங்கள் தொடர்பில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) அறிவிப்பொன்றை விடுத்துள்ளார்.

இதனடிப்படையில், இறக்குமதி செய்யப்படும் வாகனங்களை விற்பனை செய்ய வேண்டுமாயின் 90 நாட்களுக்குள் உரிய கொள்வனவாளரின் பெயரில் மோட்டார் வாகன திணைக்களத்தில் பதிவு செய்வது கட்டாயம் என அவர் தெரிவித்துள்ளார்.

குறித்த விடயத்தை நேற்று (27) வெளியிட்டிருந்த வர்த்தமானியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வாகன இறக்குமதி 

இந்தநிலையில், 1969 ஆம் ஆண்டு இறக்குமதி மற்றும் ஏற்றுமதி ஒழுங்குபடுத்தும் சட்டத்தின் கீழ் இந்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.   

வாகன இறக்குமதி தொடர்பில் ஜனாதிபதி விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு | Vehicle Prices And Imports Government Announcement

இதனடிப்படையில், 2024 டிசம்பர் 18 ஆம் திகதி முதல் இந்த ஆண்டு ஜனவரி 27ஆம் திகதி வரை ஏற்றுமதி இறக்குமதி கட்டுப்பாட்டாளரின் விதிமுறைகளுக்கு உட்பட்டு கடன் பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ள வாகனங்களை விடுவிப்பதற்கு சுங்கப் பணிப்பாளருக்கு இதனூடாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன், 2024 டிசம்பர் 18ஆம் திகதி முதல் 2025 ஜூலை 31ஆம் திகதி வரை வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான இயலுமை காணப்படுவதாக வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முக்கிய அறிவிப்பு

வாகனங்களைப் பதிவு செய்வதற்காக இறக்குமதியாளர் அல்லது கொள்வனவாளர், வரி செலுத்துவோருக்கான அடையாள இலக்கம் எனப்படும் TIN இலக்கம் உள்ளடங்கிய ஆவணத்தை சமர்ப்பிக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாகன இறக்குமதி தொடர்பில் ஜனாதிபதி விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு | Vehicle Prices And Imports Government Announcement

குறித்த விதிமுறைகளின் கீழ் இறக்குமதி செய்யக்கூடிய கட்டுப்பாடுகளுக்கு உட்பட்ட சில வாகனங்களுக்காக மாத்திரமே இவ்வாறு இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், மோட்டார் வாகன திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்ட வாகன இறக்குமதியாளர்கள் தவிர்ந்த ஏனைய நபர்களுக்கு ஒருவருட காலப்பகுதிக்குள் இவ்வாறு ஒரு வாகனத்தை மாத்திரமே இறக்குமதி செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ள மை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.