இலங்கையில் உள்ள அனைத்து வாகன விலைகளும் வரம்புகளுக்கு அப்பால் அதிகரிக்கக்கூடும் என்று வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் பிரசாத் மானகே (Prasad Manage) எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வாகனங்களுக்கு 15 சதவீத வரி விதிக்க அரசாங்கம் முன்மொழிந்துள்ளதைத் தொடர்ந்து அவர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தநிலையில் வாகன விலையுயர்வு, 2026 பாதீட்டுக்கு பின்னர் நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
முன்மொழியப்பட்ட வரி
அவர் மேலும் தெரிவிக்கையில், ”இறக்குமதியாளர்கள் தற்போது மொத்த விலையில் 15 சதவீத தள்ளுபடியைப் பெறுகிறார்கள், அதாவது மதிப்பில் 85 சதவீதம் மட்டுமே வரிக்கு உட்பட்டது.

எனினும் பாதீட்டுக்கு பின்னர் இந்த 15 சதவீத தள்ளுபடியை நீக்க வாய்ப்புள்ளது.
இந்த தள்ளுபடி நீக்கப்பட்டால், ஜப்பானில் தயாரிக்கப்பட்ட குறைந்த விலை அல்டோ முதல் உயர்நிலை வரையிலான வாகன விலை கணிசமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே 2015 முதல் இறக்குமதியாளர்கள் பெற்று வரும் தள்ளுபடியை நீக்க வேண்டாம்.
முன்மொழியப்பட்ட வரிக்குப் பிறகு, ஒரு சுஸுகி வேகன் ஆர் சுமார் 400,000 அதிகரிக்கக்கூடும். அதே நேரத்தில் ஒரு டொயோட்டா லேண்ட் குரூசர் குறைந்தது 3 மில்லியன் அதிகரிக்கக்கூடும்” என பிரசாத் மானகே தெரிவித்துள்ளார்.

