தையிட்டியில் சட்டவிரோத விகாரைக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் வேலன் சுவாமி கைது செய்யப்பட்டமையினை
வன்மையாக கண்டிப்பதாக தமிழ் மக்கள் கூட்டணியின் உபசெயலாளர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் (V. Manivannan) தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலியிலுள்ள கட்சி தலைமையகத்தில் இன்று (22) காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே வி.மணிவண்ணன் இவ்வாறு குறிப்பிட்டார்.
பெளத்த பிக்கு ஒருவர் இவ்வாறு காட்டுமிராண்டித்தனமாக இழுத்துச் செல்லப்படுவாரா என கேள்வி எழுப்பியதுடன் இதனால் தற்போது வேலன் சுவாமிகள் யாழ்ப்பாணம் போதனா
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.
அழைப்பு விடுக்கப்படவில்லை
தற்போது தமிழ்க்குடிமகன் அனைத்தும் ஒன்றிணைய தயார் என்ற செய்திகளைப் பார்க்கிறோம். ஆனால் குறித்த
விடயம் தொடர்பாக தமக்கு எவ்வித அழைப்பும் விடுவிக்கப்படவில்லை எனவும் அவர்
குறிப்பிட்டார்.

அவ்வாறு அழைப்பு விடுவிக்கப்பட்டாலும் ஒன்றிணைந்து செயற்படுவது தொடர்பாக ஒரு
தடவைக்கு நூறு தடவை சிந்திப்போம் எனவும் தமிழ் மக்கள் மணிவண்ணன் தெரிவித்தார்.
மேலும் கஜேந்திரகுமார் மற்றும் ஏனைய தமிழ்க் கட்சிகள் தொடர்பாகவும் கடுமையாக மக்கள் கூட்டணியின் உபசெயலாளர் விமர்சனங்களை வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது.

