வெசாக் பண்டிகையை முன்னிட்டு “புத்த ரஷ்மி வெசாக் வலயம்” நான்கு நாட்களுக்கு பிரதமர் அலுவலகத்தில் நடத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பில் நடத்தப்பட்ட சிறப்புக் கூட்டத்தில் இதற்கான முடிவு எட்டப்பட்டுள்ளது.
கொழும்பின் ஹுணுபிட்டியவில் உள்ள கங்காராம விகாரையும், பிரதமர் அலுவலகமும் இணைந்து “புத்த ரஷ்மி வெசாக் வலயத்தை” ஏற்பாடு செய்து வருகின்றன.
வெசாக் வலயம்
புத்த ரஷ்மி வெசாக் மண்டலம் 2025 மே 13 முதல் நான்கு நாட்களுக்கு நடைபெறவுள்ளது.
கொழும்பின் ஹுணுபிட்டியவில் உள்ள கங்காராம ஆலய, அலரி மாளிகை வளாகம், பெரஹர மாவத்தை மற்றும் பேர ஏரி ஆகிய இடங்களில் வெசாக் வலயம் நடைபெறவுள்ளது.
பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி தலைமையில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில், கங்காராமய விகாராதிபதி கிரிந்தே அசாஜி மற்றும் கலாநிதி பல்லேகம ரத்தனசார நா தேரர், பாதுகாப்புச் செயலாளர் எச்.எஸ்.எஸ்.துய்யகோத்த, புத்த சாசனம், மத மற்றும் கலாச்சார விவகார அமைச்சின் செயலாளர் டபிள்யூ.பி.சேனாதீர, இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ, பாதுகாப்புப் படைத் தலைவர்கள் மற்றும் பல அரசு நிறுவனங்களின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.