நுவரெலியா பிரதான தபால் நிலையத்தில் வெசாக் தினத்தை முன்னிட்டு (10) நேற்று
மாலை ரொட்டி, வெங்காயம் மிளகாய் சம்பல் மற்றும் தேநீர் என்பன வழங்கப்பட்டது.
பரிசோதனை
இதன்போது, 1500க்கும் மேற்பட்ட ‘வெசாக்’ பார்வையாளர்கள் மற்றும் பொதுமக்கள் தபால்
நிலையத்தில் அமைக்கப்பட்ட வெசாக் கூடுகளை கண்டு மகிழ்ந்ததுடன்
விருந்தோம்பலிலும் பங்கு கொண்டனர்.
நுவரெலியா நகரசபையின் நகர சுகாதார வைத்திய அதிகாரிகள் குறித்த வெசாக் தானம்
வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்த உணவு பொருட்களை முதலில் பரிசோதனை
மேற்கொண்டதன் பின்னர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

