முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இனப்படுகொலை வழக்கில் மகிந்தவை காப்பாற்றிய சட்டத்தரணி! வெளிச்சத்துக்கு வந்த அறிக்கை

ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் செயலாளர் பென்கீ மூன் 2011 ஆம் ஆண்டு தருஸ்மன் அறிக்கையை கொண்டு சர்வதேச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்க எடுத்த முயற்சியை தானே முறியடித்ததாக முன்னாள் அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பாக அவர் கருத்து தெரிவிக்கையில்,

“தருஸ்மன் அறிக்கையில் இறுதி போரில் 40,000 பொது மக்கள் கொள்ளப்பட்டமை கண்டறிப்பட்டுள்ளதாகவும் அதில் குற்றவாளிகளாக அப்போதை ஜனாதிபதி மற்றும் பாதுகாப்புச் செயலாளர், முப்படை தளபதிகள் மற்றும் பாதுகாப்பு தரப்பின் உயர் அதிகாரிகளின் பெயர் பட்டியலை கொண்டு சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப் போவதாக அன்றை ஜனாதிபதி மகிந்தவுக்கு கடிதம் ஒன்று அனுப்பப்பட்டிருந்தது.

அதிர்ச்சிக்குள்ளான மகிந்த

அச்சந்தர்ப்பத்தில் அதிர்ச்சிக்குள்ளான மகிந்த செய்வதறியாது தன்னிடம் கதைத்தார்.

இனப்படுகொலை வழக்கில் மகிந்தவை காப்பாற்றிய சட்டத்தரணி! வெளிச்சத்துக்கு வந்த அறிக்கை | Vijayadasa Saved Mahinda

அப்போது நான் எதிர்க்கட்சியில் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தேன்.

நாங்கள் ஒரு நாள் முழுவதும் கதைத்து ஐந்து காரணங்களை சுட்டிக் காட்டி எமது நாட்டுக்கு எதிராக எவ்வாறு வழக்கு தொடுக்க முடியும் என எனது பெயரில் கடிதம் ஒன்றை அனுப்பினேன்.

அப்போது ஐக்கிய நாடுகள் சபையின் தலைமை அலுவலகத்தில் நடந்த செய்தியாளர் மாநாட்டில் இரண்டு காரணங்களை ஏற்றுக் கொண்ட பான் கீ மூன் வழக்கு தாக்கல் செய்வதை கைவிடுவதாக தெரிவித்திருந்தார்.

பான் கீ மூன் அறிக்கை  

இறுதி யுத்தம் நிறைவடைந்த 48 மணித்தியாலயத்தில் இலங்கை வந்த பான் கீ மூன் இறுதி போரில் நடைபெற்ற யுத்தக் குற்றம் மற்றும் மனித உரிமை மீறல் தொடர்பில் உள்ளக விசாரணை செய்ய வேண்டும் என புரிந்தணர்வு ஒப்பந்தம் ஒன்று செய்து கொண்டார்.

இனப்படுகொலை வழக்கில் மகிந்தவை காப்பாற்றிய சட்டத்தரணி! வெளிச்சத்துக்கு வந்த அறிக்கை | Vijayadasa Saved Mahinda

அதை கொண்டே அவர் சர்வதேச விசாரணை அறிக்கையையும் தயாரித்தார்.

இந்நிலையில் இலங்கை ஒப்புதல் வழங்கியதாலே அவருக்கு அவ்வாறு செய்ய முடிந்தது.

செப்டெம்பர் மாதம் ஜெனிவாவில் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 60ஆவது கூட்டத் தொடரிலும் இலங்கைக்கு மேலும் அழுத்தங்கள் பிரயோகிக்க கூடும்”  எனவும் அவர் தெரிவித்தார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.