பரிசுத்த திருத்தந்தை பிரான்சிஸின் இறுதிச் சடங்கில் இலங்கை அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் (Vijitha Herath) கலந்து கொள்வார் என்று வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது.
மறைந்த திருத்தந்தையின் இறுதிச் சடங்குகள் நாளை (26) வத்திக்கான் நகரத்தின் செயிண்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் நடைபெற உள்ளது.
இந்நிலையில், கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் திருத்தந்தை பிரான்சிஸ் கடந்த 21ஆம் திகதி நித்திய இளைப்பாறி அடைந்தமை குறிப்பிடத்தக்கது.