இலங்கையின் வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத், கொழும்பில் இருந்து இயங்கும்
ராஜதந்திரிகளை சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வாரத்தில் குறித்த சந்திப்பு ஏற்பாடாகியுள்ளது.
ராஜதந்திரிகளுக்கு விளக்கம்
இதன்போது இலங்கையில் தேசிய மக்கள் சக்தியின் ஆட்சி அமைந்த பின்னர் ஏற்பட்டுள்ள
மனித உரிமைகள் தொடர்பான முன்னேற்றங்களை விஜித ஹேரத், ராஜதந்திரிகளுக்கு
விளக்குவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
2025 செப்டெம்பர் 8ஆம் திகதியன்று, 60ஆவது ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள்
பேரவை அமர்வுகள் ஆரம்பமாகின்றன.

இதில் கலந்து கொள்ள ஜெனீவாவுக்குச் செல்வதற்கு முன்னரே விஜித ஹேரத்
ராஜதந்திரிகளை சந்திக்கவுள்ளார்.
பயங்கரவாத தடுப்புச் சட்டம்
இந்த சந்திப்பின்போது, பயங்கரவாதத் தடுப்பு சட்டத்தை ரத்து செய்ய எடுக்கப்பட்ட
நடவடிக்கைகள் மற்றும் ஒரு சுயாதீன வழக்கு தொடுநர் அலுவலகத்தை அமைத்தல் ஆகிய
விடயங்களை அரசாங்கம் முன்னிலைப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

