முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை விநியோகம் ஆரம்பம்

இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் அஞ்சல் திணைக்களத்திற்கு (Department of Posts) வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த செயற்பாடானது இன்றைய தினம் (02.09.2024) முன்னெடுக்கப்படவுள்ளது.

ஜனாதிபதித் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை அஞ்சல் திணைக்களம், வீடுகளுக்கு சென்று விநியோகிக்கும் என தேர்தல்கள் ஆணைக்குழு (Election Commission of Sri lanka) தெரிவித்துள்ளது.

வாக்காளர் அட்டை

இதேவேளை, தமது திணைக்களத்திற்கு கிடைக்கும் உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை விநியோகத்தை நாளை முதல் ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாக பிரதி அஞ்சல் மா அதிபர் ராஜித ரணசிங்க (Rajitha Ranasinghe) தெரிவித்துள்ளார்.

உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை விநியோகம் ஆரம்பம் | Voter Cards To The Department Of Posts Today

இதேவேளை எதிர்வரும் 4 ஆம் திகதி மாவட்டச் செயலர் அலுவலகங்கள் மற்றும் தேர்தல் ஆணைக்குழு அலுவலகங்களில் தபால் மூல வாக்குகளை வழங்க முடியும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

செப்டெம்பர் மாதம் 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் முப்படை முகாம்கள் மற்றும் ஏனைய அனைத்து அரச நிறுவனங்களிலும் தபால் மூல வாக்குகளை வழங்க முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் தபால் மூல வாக்குகளை உரிய நாட்களில் வழங்க முடியாதவர்கள், செப்டெம்பர் 11 மற்றும் 12 ஆம் திகதிகளில், தங்களின் பணியிடம் அமைந்துள்ள மாவட்ட தேர்தல் அலுவலகங்களில் தபால் மூல வாக்குகளை வழங்க முடியும் எனவும் தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்